மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 பிப் 2018

இந்தியில் வாசிக்கப்பட்டது ஏன்?

இந்தியில் வாசிக்கப்பட்டது ஏன்?

மற்ற மாநிலங்களுக்குப் புரியவே இந்தியிலும் ஆங்கிலத்திலும் பட்ஜெட் உரை வாசிக்கப்பட்டதாகத் தமிழக பாஜக தலைவர் தமிழிசை விளக்கம் அளித்துள்ளார்.

மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனது உரையை இந்தியிலும் ஆங்கிலத்திலும் வாசித்தார். இதற்குப் பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் எழுந்தன. குறிப்பாகத் தமிழகத்திலிருந்து பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. அமைச்சர் ஜெயக்குமார், "அண்ணாவின் வழியில் இந்தியை தமிழகம் ஏற்றுக்கொள்ளாது. தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையைத் தான் நாம் கடைப்பிடிக்கிறோம்" என்று எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று (பிப்ரவரி 2) செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது . அதற்கு, "ஒரு மொழியில் பட்ஜெட் வாசிக்கப்பட்டால் மற்றொரு மொழி புறக்கணிக்கப்படுகிறது என்று அர்த்தமில்லை. மற்ற மாநிலங்களுக்கும் புரிய வேண்டும் என்பதற்காகவே இந்தியில் பட்ஜெட் உரை வாசிக்கப்பட்டது. ஆனால் உடனே இதனை அரசியலாக்குகிறார்கள். ஆங்கிலத்தில் உரை வாசிக்கப்பட்டால் மட்டும் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் பட்ஜெட் உரை ஆங்கிலத்திலும், இந்தியிலும்தான் வாசிக்கப்பட்டது. பட்ஜெட் உரையில் தமிழ் நகல்களும் இருந்தன. எனவே மொழியை வைத்து அரசியல் செய்வதை தயவுசெய்து நிறுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வெள்ளி 2 பிப் 2018