அனிருத்தின் புதிய முயற்சி!


இளம் இசையமைப்பாளர்களில் ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்று வரும் அனிருத் புதிய ரெஸ்டாரண்ட் ஒன்றை திறந்திருக்கிறார்.
தனுஷின் 3 படத்தின் மூலம் அறிமுகமான அனிருத், அதில் இடம்பெற்ற ‘ஒய் திஸ் கொலைவெறி’ பாடல் தந்த வரவேற்பால் உலக அளவில் அறியப்பட்ட முகமானார். தமிழின் முன்னணி நட்சத்திரங்களான விஜய், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்கள் பலரது படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். மேலும் தெலுங்கில் இவர் இசையமைத்திருக்கும் பவன் கல்யாண் படத்திற்கும் அங்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இந்த நிலையில் சினிமாவைத் தாண்டி தொழில் முறையில் இறங்கியிருக்கிறார் அனிருத். அதன் தொடக்கமாக சென்னை, தேனாம்பேட்டையில் ரெஸ்டாரண்ட் ஒன்றை புதிதாக தொடங்கியிருக்கிறார். ‘தி சம்மர் ஹவுஸ் ஈட்டெரி’ (The Summer House Eatery) என்ற பெயர் கொண்ட இந்த ரெஸ்டாரண்ட் தேனாம் பேட்டை, சீதாம்மாள் சாலையில் இருக்கிறது.