மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 பிப் 2018

சென்னை ஐடிஐ மாணவர் கொலை : மூவர் கைது!

சென்னை ஐடிஐ மாணவர் கொலை : மூவர் கைது!

கிண்டி தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேரைக் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ரஞ்சித் குமார் கிண்டி தொழில்நுட்ப கல்லூரியில் ஐடிஐ படித்து வந்தார். தனது தாய் சரஸ்வதியுடன் வசித்துவந்த மாணவர் கடந்த ஜனவரி 19ஆம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே மர்ம நபர்களால் வெட்டப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். சுவாதி கொலைக்குப் பிறகு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்

மாணவர் கொலை செய்யப்பட்ட பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் ரஞ்சித்தை மூன்று பேர் துரத்தித் துரத்தி வெட்டியதும். ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததும் தெரியவந்தது.

இந்நிலையில் இன்று (பிப்ரவரி 2) மாணவர் கொலை வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். வடபழனி கார்த்திகேயன், சாலிகிராமம் நவீன்குமார், போரூர் சிவகணேஷ் மூவரும் மாணவனைக் கொலை செய்தது விசாரணையில் தெரிவந்துள்ளது.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 2 பிப் 2018