மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 பிப் 2018

பட்ஜெட்: கமலின் ஆதரவும் எதிர்ப்பும்!

பட்ஜெட்: கமலின் ஆதரவும் எதிர்ப்பும்!

மத்திய பட்ஜெட்டில் கிராமப்புறத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாகவும், நடுத்தர வர்க்கத்தின் மீது பாராமுகம் காட்டப்பட்டுள்ளதாகவும் நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 29ஆம் தேதி தொடங்கிய நிலையில், நேற்று 2018-19ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து பட்ஜெட் குறித்து பல்வேறு விவாதங்களும் நடைபெற்றுவருகின்றன. இந்த பட்ஜெட்டில் தமிழக நலன்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில், நடுநிலையான பட்ஜெட் என்று முதல்வர் கருத்து தெரிவித்துள்ளார்.

பல்வேறு பிரச்சினைகள் குறித்துத் தன் கருத்துகளைத் தெரிவித்துவரும் நடிகர் கமல்ஹாசன் பட்ஜெட் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்கா செல்வதற்காக இன்று (பிப்ரவரி 2) சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார். "மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டது என்று சொல்ல முடியாது. ஏனெனில் அந்தச் சோகம் பல ஆண்டுகளாகவே நிகழ்ந்துவருகிறது. பட்ஜெட்டில் விவசாயிகளின் பக்கம் சற்றே மத்திய அரசின் கடைக்கண் பார்வை திரும்பியுள்ளது. கிராமப்புறத்தின் பக்கமும் திரும்பியுள்ளது. இது மகிழ்ச்சியாக உள்ளது. நடுத்தர வர்க்கத்தைப் பராமுகமாகக் கொண்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என்ற அவர், அறிஞர்களுடன் ஆலோசனை நடத்தித் தனது கருத்தைத் தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 2 பிப் 2018