மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 பிப் 2018

ரகுல் படத்தைக் கைப்பற்றிய பூஜா

ரகுல் படத்தைக் கைப்பற்றிய பூஜா

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் 25ஆவது படமாக உருவாகவிருக்கும் படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகியிருக்கிறார்.

மகேஷ் பாபு பெரிதும் எதிர்பார்த்த ஸ்பைடர் திரைப்படம் ஏமாற்றத்தையே தந்தது. இருப்பினும் அடுத்தடுத்து தெலுங்கில் முன்னணி இயக்குநர்களின் படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார் மகேஷ் பாபு. இந்தப் படத்தைத் தொடர்ந்து கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'பாரத் அனே நேனு' படத்தில் நடித்திருக்கிறார். மகேஷ் பாபுவின் 24ஆவது படமான இது ஏப்ரல் 27ஆம் தேதி வெளிவரவிருக்கிறது. இதனையடுத்து மகேஷ் பாபுவின் 25ஆவது படமாக உருவாகவிருக்கும் படத்திற்கு பூஜா ஹெக்டே நாயகியாக ஒப்பந்தமாகியிருக்கிறார்.

கடந்த ஆண்டு நாகார்ஜுனா, கார்த்தி, தமன்னா ஆகியோர் நடிப்பில் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற `ஊப்பிரி' திரைப்படத்தை இயக்கியவர் வம்சி பைடிபல்லி. தமிழில் `தோழா' என்ற பெயரிலும் வெளியாகி இது வரவேற்பைப் பெற்றது. இவர் மகேஷ் பாபுவின் 25ஆவது படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடிப்பதாக முன்பு செய்தி வெளியானது. தற்போது பூஜா ஹெக்டே நடிக்கவிருக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வெள்ளி 2 பிப் 2018