பட்ஜெட்: பிரதம அலுவலக நிதி அதிகரிப்பு!


மத்திய பட்ஜெட் அறிவிப்பில், பிரதம அமைச்சர் அலுவலகச் செலவுகளுக்கு நடப்பு நிதியாண்டை விடச் சற்றுக் கூடுதலான அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2017-18 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பிரதம அமைச்சர் அலுவலகத்துக்கு ரூ.44.13 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. 2018-19 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிவிப்பில் சற்று கூடுதலாக ரூ.50.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிதியானது பிரதம அமைச்சர் அலுவலகத்துக்கான நிர்வாகச் செலவுகளுக்காகப் பயன்படுத்தப்படும். மேலும், அரசின் விருந்தோம்பல் மற்றும் வெளிநாட்டு அரசு விருந்தினர் பொழுதுபோக்குச் செலவுகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் கடந்த பட்ஜெட்டுக்கான தொகைக்குச் சற்று ஈடான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது.