மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 பிப் 2018

மருத்துவமனை குப்பைத்தொட்டியில் வெடிகுண்டு!

மருத்துவமனை குப்பைத்தொட்டியில் வெடிகுண்டு!

நாகப்பட்டினத்தில் மருத்துவமனைக்கு அருகே உள்ள குப்பைத்தொட்டியில் இருந்த வெடிகுண்டு வெடித்ததில் ஒரு தொழிலாளியின் கைவிரல் துண்டாகியது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பெருமாள் தெற்கு வீதியில் ஜே.எஸ்.எல். மருத்துவமனை செயல்பட்டுவருகிறது. அம்மருத்துவமனைக்கு அருகே ஒரு குப்பைத்தொட்டியும் உள்ளது. குப்பை பொறுக்கும் தொழிலாளியான தூத்துக்குடியைச் சேர்ந்த விவேகானந்தன் என்பவர், அந்தக் குப்பைத்தொட்டியில் உள்ள பொருட்களைச் சேகரித்தார். பின்னர் சேகரித்த பொருட்களை மருத்துவமனை அருகே அமர்ந்து அவர் தரம் பிரித்துக்கொண்டிருந்தார்.

அப்போது அந்தக் குப்பைகளில் பெட்டி போன்ற ஒரு பொருள் இருந்தது. அந்தப் பெட்டியைப் பிரிக்க முயன்றபோது, பலத்த சத்தத்துடன் அது வெடித்துச் சிதறியது. வெடிகுண்டு வெடித்துச் சிதறியதில் விவேகானந்தனனின் கைவிரல்கள் துண்டாகி உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது. பின்னர் அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். வெடித்த பொருளில் வெடிமருந்து, ஆணிகள், கூலாங்கற்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. எனவே வெடித்தது நாட்டு வெடிகுண்டாக இருக்கலாம் எனக் காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

வெள்ளி 2 பிப் 2018