மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 பிப் 2018

சசிகலா அணியுடன் இணக்கமா?

சசிகலா அணியுடன் இணக்கமா?

சசிகலா அணியுடன் இணக்கமாகச் செல்ல எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில் அது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார்.

தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னை பட்டினப்பாக்கத்தில் இன்று (பிப்ரவரி 2) செய்தியாளர்களைச் சந்தித்தார் . அப்போது, “வருமான வரி விலக்கு உச்ச வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்தியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். வருமான வரி செலுத்துவோருக்கு நிரந்தரக் கழிவாக ரூ.40 ஆயிரம் வழங்கியிருப்பது போதாது. இதை உயர்த்திக் கொடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

மேலும், அருண் ஜேட்லி பட்ஜெட்டை இந்தியில் படித்தது தொடர்பான கேள்விக்கு, “தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையைத்தான் நாம் கடைப்பிடிக்கிறோம். அண்ணாவின் வழியில் இந்தியைத் தமிழகம் ஏற்றுக்கொள்ளாது” என பதிலளித்தார்.

“ரயில்வேக்கு பெரம்பூரில் விரிவாக்கம் செய்வதற்கு புதுத் திட்டம் கொண்டுவந்துள்ளது வரவேற்கத்தக்கது. ரயில்வேத் திட்டங்களில் தமிழகத்தின் கோரிக்கை பரிசீலனை செய்யப்படும் என நம்புகிறோம். இதேபோல், கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, பாலாறு, காவிரி நதிகளை இணைக்கும் திட்டத்தைச் செயல்படுத்தினால் சிறப்பாக இருக்கும்.

கிழக்கு கடற்கரை சாலையை 4 வழிச் சாலையாக மாற்றும் திட்டத்திற்கு இந்த ஆண்டு நிதி ஒதுக்க வாய்ப்புள்ளது. இந்தச் சாலையை நாகப்பட்டினத்திலிருந்து கன்னியாகுமரி வரை நீட்டிக்கவும் நிதி கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்றும் அவர் கூறினார்.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

வெள்ளி 2 பிப் 2018