மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 பிப் 2018

வாக்காளர்கள் பெருமை பேசும் படம்!

வாக்காளர்கள் பெருமை பேசும் படம்!

வாக்காளர்களின் நிலையையும், அவர்களின் பெருமையையும் பேசும் விதமாக உருவாகும் ‘திரு.வாக்காளர்’ படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது.

1986 லா பேச் மீடியா புரொடக்‌ஷன் (1986 law Batch Media Productions) நிறுவனம் தயாரிக்கும் திரைப்படம் திரு.வாக்காளர். மகேந்திரன், ஆர்.வி.உதயகுமார் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த ரமேஷ் பிரபாகரன் இந்த படத்தை இயக்குகிறார். கன்னடத்தில் ‘கள்மஞ்சா’ என்ற படத்தை இயக்கியுள்ள நிலையில், இந்த படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அபி சரவணன் நடிப்பதுடன் மேலும் சில புதுமுகங்களும் நடிக்கவுள்ளனர்.

இப்படத்தின் பூஜை சென்னை ஆர்.கே.வி ஸ்டுடியோவில் சமீபத்தில் நடைபெற்றது. அதில் இயக்குநர்கள் ஆர்.வி. உதயகுமார், ராஜாரவி, வி.சி.குகநாதன், லியாகத் அலிகான், ஆர்.சுந்தர்ராஜன், மனோஜ்குமார், இ.ராம்தாஸ், நடிகர்கள் நட்டி நடராஜ், ஆரி, அபி சரவணன், வையாபுரி, ராம்ஜி, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

வெள்ளி 2 பிப் 2018