மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 பிப் 2018

தமிழில் அறிமுகமாகும் மலையாள இயக்குநர்!

தமிழில் அறிமுகமாகும் மலையாள இயக்குநர்!

மலையாள இயக்குநர் திலீஷ் போத்தன் தமிழில் நடிகராக அறிமுகமாகவுள்ளார்.

பஹத் ஃபாசில் கதாநாயகனாக நடித்த மகேஷிண்டே பிரதிகாரம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் திலீஷ் போத்தன். சிறந்த திரைக்கதைக்கான தேசியவிருதை இப்படம் வென்றது. உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகியுள்ள நிமிர் திரைப்படம் இந்த படத்தின் ரீமேக் ஆகும். இவர் இயக்கிய இரண்டாவது படமான தொண்டிமுதலும் த்ரிக்ஷாக்‌ஷியும் படத்திலும் பஹத் ஃபாசில் நடித்திருந்தார். இப்படமும் ரசிகர்களிடையேயும் விமர்சனரீதீயாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இயக்குநராவதற்கு முன்பே மலையாள திரைப்படங்களில் குணசித்திர நடிகராக வலம் வந்த திலீஷ் போத்தன், இயக்குநராக ஹிட் கொடுத்த பின்பும் நடிப்பு பணியை தொடர்ந்து வருகிறார். கடந்த ஆண்டு மட்டும் ஒன்பது படங்களில் நடித்துள்ளார். தற்போது லியோன் என்ற படத்தில் நடிப்பதன் மூலம் தமிழ் திரையுலகிலும் நடிகராக அறிமுகமாகிறார். தமிழ், மலையாளம் என இருமொழிகளில் உருவாகும் இந்த படத்தில் மெர்சல், விக்ரம் வேதா படங்களில் நடித்து கவனம் பெற்ற மலையாள நடிகர் ஹரீஷ் பெராடியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வெள்ளி 2 பிப் 2018