மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 பிப் 2018

உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது: தீபா புகார்!

உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது: தீபா புகார்!

தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா சென்னை மாநகர ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தீபா பேரவை என்ற அமைப்பைத் தனியாக நடத்தி வருகிறார். சமீபத்தில் தனது கார் டிரைவரான ராஜாவை பேரவையிலிருந்து நீக்கிய தீபா, தற்போது மீண்டும் பேரவையில் இணைத்துள்ளார். அவருக்கு தலைமை நிலைய மாநிலச் செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து இன்று (பிப்ரவரி 2) சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்த தீபா, தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தீபா, "தொலைபேசி மூலம் எனக்கு கொலை மிரட்டல் வருகிறது. சசிகலா மற்றும் தினகரன் ஆதரவாளர்கள் என்னை மிரட்டுக்கின்றனர். என்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதால் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளேன். ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு நான் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடத்த ஏற்பாடு செய்தேன். அதனைத் தடுக்கும் விதமாக என்னுடைய முகநூல் பக்கத்திலேயே, தினகரன் ஆதரவாளர்கள் அவதூறு பரப்புகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்று கூறினார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வெள்ளி 2 பிப் 2018