மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 பிப் 2018

விலையை குறைத்த நோக்கியா!

விலையை குறைத்த நோக்கியா!

முன்னணி நிறுவனமான நோக்கியா விற்பனையை அதிகரிக்க ப்ரீமியம் மாடலின் விலையை குறைத்துள்ளது.

மொபைல் விற்பனையில் தனக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்திருந்த நோக்கியா நிறுவனம் மீண்டும் தனது இடத்தை பிடிக்க போராடி வருகிறது. ஏனெனில் புதிய பல்வேறு நிறுவனங்கள் குறைந்த விலையுடன், அதிக வசதிகள் கொண்ட நம்பகத்தன்மை கொண்ட மாடல்கள் பலவற்றினை வெளியிட்டுள்ளன. நீண்ட நாட்களாக உற்பத்தியை நிறுத்தி வைத்திருந்த நோக்கியா நிறுவனம் மீண்டும் விற்பனையை தொடங்கிய போது பயனர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் விலை அதிகம் என்பதால் அதனை வாங்க பயனர்கள் சற்றே தயக்கம் தெரிவித்தனர். எனவே அதனை சரிசெய்வதற்காக நோக்கியா 5 மாடலின் விலையை ரூ.1000 குறைத்துள்ளது. அதுமட்டுமின்றி ரூ.36,999க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நோக்கியா 8 மாடலின் விலையை ரூ.8000 குறைத்து ரூ.28,999க்கு விற்பனை செய்யவிருப்பதாக தெரிவித்துள்ளது.

4GB RAM, 64GB இன்டெர்னல் வசதி கொண்டுள்ள நோக்கியா 8 மாடல் 3090 mAh பேட்டரி சக்தி கொண்டது. 5.3 இன்ச் திரையளவும், ஸ்னேப்டிராகன் 835 ப்ராசஸ்சர் வசதியும் இந்த மாடலில் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் 13MP டூயல் கேமராவும், 13MP செல்ஃபி கேமராவும் கொண்டுள்ள இந்த மாடலின் விலை குறைந்துள்ளதால் இனி பயனர்கள் இந்த மாடலை வாங்க ஆர்வம் காட்டுவார்கள் என நோக்கியா நிறுவனம் எதிர்பார்க்கிறது.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 2 பிப் 2018