மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 பிப் 2018

பிடல் காஸ்ட்ரோவின் மகன் தற்கொலை!

பிடல் காஸ்ட்ரோவின் மகன் தற்கொலை!

கியூப புரட்சியாளரும் அந்நாட்டின் முன்னாள் அதிபருமான பிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கியூப புரட்சியாளரும் அந்நாட்டை சுமார் 50 ஆண்டுகள் ஆட்சி செய்தவருமான பிடல் காஸ்ட்ரோ கடந்த 2016ஆம் ஆண்டு காலமானார். பிடல் மறைவுக்குப் பின்னர் அவரது சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். இந்நிலையில், பிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் பிடல் ஏஞ்சல் காஸ்ட்ரோ டியஸ் பாலார்ட் தற்கொலை செய்துகொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அவருக்கு வயது 68 ஆகும்.

பிடலிடோ அல்லது லிட்டில் பிடல் என்று அறியப்படும் பாலார்ட், சோவியத் ஒன்றியத்தில் அணுக்கூறு இயற்பியல் குறித்து படித்துள்ளார்.

“பல மாதங்களாக மருத்துவக் குழுவினர், காஸ்ட்ரோ டியஸ் பாலார்டுக்கு ஆழ்ந்த மன அழுத்தத்திற்கான சிகிச்சையை அளித்துவந்த நிலையில், இன்று காலையில் தனது உயிரை மாய்த்துக்கொண்டார்" என்று கியூபாவின் அதிகாரபூர்வ செய்தித்தாளான ’கிராண்மா’ செய்தி வெளியிட்டுள்ளது. இறுதிச் சடங்குகள் குறித்து அவரது குடும்பம் முடிவெடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வெள்ளி 2 பிப் 2018