மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 பிப் 2018

ஏமாற்றம் அளித்த கிடாம்பி!

ஏமாற்றம் அளித்த கிடாம்பி!

இந்தியன் ஒப்பன் பேட்மிண்டனின் இரண்டாம் சுற்றில் இந்திய முன்னணி வீராங்கனைகள் பி.வி.சிந்து, சாய்னா நேவால் மற்றும் இந்திய வீரர் ப்ரநீத் ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றிற்கு முன்னேறினர்.

இந்தியன் ஒப்பன் பேட்மிண்டன் தொடர் நேற்று முன்தினம் (ஜனவரி 31) டெல்லியில் தொடங்கியது. முதல் நாள் நடைபெற்ற முதல் சுற்று போட்டிகளில் இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த் கிடாம்பி, ப்ரநீத் மற்றும் வீராங்கனைகள் பி.வி.சிந்து மற்றும் சாய்னா நேவால் ஆகியோர் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றிற்கு முன்னேறினர். நேற்று (பிப்ரவரி 1) நடைபெற்ற இரண்டாவது சுற்று போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்த் கிடாம்பி தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார். மற்றொரு ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ப்ரநீத், ஹாங் காங் வீரர் ஹென் யூவை 21-10, 21-15 என்ற நேர் செட்களில் வீழ்த்தி அடுத்த சுற்றிற்கு முன்னேறினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி சிந்து, பல்கேரியாவின் லிண்டாவுடன் மோதினார். அதில் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய சிந்து 21-10, 21-14 என்ற செட்கணக்கில் எளிதில் வெற்றி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் சாய்னா நேவால், டென்மார்க் வீராங்கனை லைன் உடன் மோதினார். இதில் தொடக்கத்தில் லைன் புள்ளிகளை பெற்று வந்தாலும் பின்னர் தொடர்ச்சியாக புள்ளிகளை சேர்த்த சாய்னா 21-12, 21-11 என எளிதில் வெற்றி பெற்றார். இவர்கள் இன்று (பிப்ரவரி 2) நடைபெறும் அடுத்த சுற்று ஆட்டத்தில் விளையாட உள்ளனர்.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

வெள்ளி 2 பிப் 2018