மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 பிப் 2018

பட்ஜெட்டில் உயர்ந்த நிதிப் பற்றாக்குறை!

பட்ஜெட்டில் உயர்ந்த நிதிப் பற்றாக்குறை!

2018-19 நிதியாண்டுக்கான இந்தியாவின் நிதிப் பற்றாக்குறையை ஏற்கெனவே நிர்ணயித்த அளவான 3 சதவிகிதத்திலிருந்து 3.3 சதவிகிதமாக உயர்த்தப்படுவதாக மத்திய பட்ஜெட் தாக்கலில் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

வருகிற மார்ச் மாதம் தொடங்கும் 2018-19 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டானது நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியால் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதில் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை 3.3 சதவிகிதமாக இருக்கும் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். முன்னதாக 2018-19 நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை 3 சதவிகிதமாக இருக்கும் என்று மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. கடந்த ஆண்டுக்கான நிதிப்பற்றாக்குறை இலக்கு எல்லை தாண்டியதாலேயே தற்போது இலக்கில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

அதாவது 2017-18 நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை 3.2 சதவிகிதமாக நிர்ணயம் செய்யப்பட்டு, அந்த அளவைவிட அதிகரித்ததால், பின்னர் பற்றாக்குறை இலக்கு 3.5 சதவிகிதமாக உயர்த்தி நிர்ணயம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 2017-18இல் மறு பங்கு விற்பனை வாயிலாகக் கிடைக்கும் முதலீட்டில் ரூ.72,500 கோடியை ஈட்ட அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், 1 லட்சம் கோடி வரையிலான முதலீடுகள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, 2018-19 நிதியாண்டில் பங்கு விற்பனை வாயிலாக ரூ.80,000 கோடி நிதி திரட்ட அரசு திட்டமிட்டுள்ளது. இதில் ஏர் இந்தியா விமான நிறுவனத்தைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கையும் அடங்கும்.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

வெள்ளி 2 பிப் 2018