அதிகக் கட்டணம்: மாணவர்கள் போராட்டம்!


கும்பகோணத்தில் அதிகக் கட்டணம் கேட்பதாக நிர்வாகத்தின் மீது குற்றம்சாட்டி தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் நேற்று (பிப்ரவரி 1) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கும்பகோணம் அருகே உடையாளூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் சுமார் 750 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு இறுதியாண்டு மாணவர்களுக்கு நேர்முகத் தேர்வுகளை எதிர்கொள்வது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சி வகுப்புக்காக ஒவ்வொரு மாணவரிடமும் ரூ.2,200 கட்டணமாகச் செலுத்த கல்லூரி நிர்வாகம் வற்புறுத்தியதாகத் தெரிகிறது. மேலும், தேர்வு எழுதாமல் இருந்தாலும், தேர்வு எழுதித் தோல்வியடைந்தாலும் அபராதம் செலுத்த வேண்டும் என்பது போன்ற விதிகள் கல்லூரியில் இருப்பதைக் கண்டித்து வகுப்புகளைப் புறக்கணித்த மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.