ஏற்றம் காணும் ஏற்றுமதி!

இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு நடப்பு நிதியாண்டில் 15 சதவிகித வளர்ச்சியை எட்டும் என்று பட்ஜெட் உரையில் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
வருகிற 2018-19 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டானது நிதியமைச்சர் அருண் ஜேட்லியால் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் தாக்கலில் அருண் ஜேட்லி இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் குறித்துப் பேசுகையில், “இந்தியாவின் டிசம்பர் மாத வணிக ஏற்றுமதி 12.36 சதவிகித உயர்வுடன் 27.03 பில்லியன் டாலராக இருந்தது. அதேபோல, நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான மாதங்களில் ஏற்றுமதி மதிப்பு 12.05 சதவிகிதம் உயர்ந்து 223.52 பில்லியன் டாலராக இருந்துள்ளது. எனவே, நடப்பு நிதியாண்டு முழுவதுக்குமான ஏற்றுமதி 15 சதவிகிதம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று பேசினார்.