மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 பிப் 2018

குழந்தைகளின் அரசன் வருகிறான்!

குழந்தைகளின் அரசன் வருகிறான்!

சூப்பர் மேன் குழந்தைகளுக்குப் பிடித்தவர் என்று எழுதுபவர்கள், ஒரு தாய்க்குத் தன் குழந்தை எப்போதும் குழந்தைதான் எனும் கூற்றில் நம்பிக்கை உடையவர்களாகவே இருப்பார்கள். பெரும்பாலான குழந்தைகளின் சூப்பர் ஹீரோ, சூப்பர் மேரியோதான்.

வீடியோ கேம் உலகின் முடிசூடா மன்னன் என அழைக்கப்படும் சூப்பர் மேரியோவைத் திரைப்படமாக எடுக்க முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. மேரியோ தொடர்களை உருவாக்கிய ஷிகெரு மியாமொடோ இந்தத் திரைப்படத்தைத் தயாரிப்பதைத் தவிர ஒரு வீடியோ கேம் கிரியேட்டருக்கு வேறு என்ன பெருமை இருந்துவிட முடியும். நிண்டெண்டோ வீடியோ கேம் நிறுவனம் சூப்பர் மேரியோவின் லேட்டஸ்ட் வெர்ஷனை, அதன் புதிய டிவைஸான ஸ்விட்சில் ரிலீஸ் செய்து 500 மில்லியன் காப்பிகளை விற்றிருக்கிறது. நிண்டெண்டோ என்று மட்டுமில்லை. உலகிலுள்ள அனைத்து வீடியோ கேம் டிவைஸ்களிலும் சூப்பர் மேரியோ உருவாக்கப்படும்போதெல்லாம், அதற்கான ராயல்டி தொகையை ஷிகெருவுக்குத் தர வேண்டும். அப்படிக் கிடைத்த பணத்தை வைத்தே ஒரு திரைப்படத்தைத் தயாரிக்கும் அளவுக்கு வந்திருக்கிறார் என்றால், சூப்பர் மேரியோவின் மதிப்பு என்னவாக இருக்குமென சுலபமாக கணித்துவிடலாம்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 2 பிப் 2018