மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 பிப் 2018

அதானிதான் விவசாயியா? - வைகோ

அதானிதான் விவசாயியா? - வைகோ

விவசாயிகளின் வருவாயை இரண்டு மடங்கு உயர்த்தப்போவதாக மத்திய அரசு பட்ஜெட்டில் கூறியுள்ள நிலையில், ‘அதானி போன்றோரைத்தான் விவசாயி என அருண் ஜேட்லி எண்ணுகிறாரா?’ என வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய பாஜக ஆட்சியின் கடைசி பட்ஜெட் நேற்று (பிப்ரவரி 1) தாக்கல் செய்யப்பட்டது. அதில், விவசாயிகளின் வருவாய் 2022க்குள் இரண்டு மடங்கு அதிகரிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “அருண் ஜேட்லி எந்த உலகில் இருக்கிறார் என்பதே தெரியவில்லை. விவசாயிகளின் வருவாயை 2022க்குள் இரண்டு மடங்கு உயர்த்தப்போவதாக அவர் கூறியுள்ளார். ஒருவேளை, அதானி கூட்டத்தைத்தான் விவசாயிகள் என அவர் நினைக்கிறாரா?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “கரூர், சேலம், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மின் கோபுரங்களை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. விவசாயிகளின் போராட்டத்தையடுத்து அது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தால் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்படும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதியத்தை பிடித்தம் செய்துள்ளது நம்பிக்கை துரோகம் என குறிப்பிட்ட அவர், “இருதரப்பும் பேசுவதற்கு இணக்கமான சூழ்நிலை ஏற்பட்டதையடுத்தும் பொங்கலுக்கு மக்கள் கஷ்டப்படக் கூடாது என்பதைக் கருத்தில்கொண்டும் அவர்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் வாங்கினர். தற்போது, அவர்களின் ஊதியத்தைப் பிடித்தம் செய்துள்ளது இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்தாது” என்று அவர் எச்சரித்துள்ளார்.

காவிரி தண்ணீரை தரமுடியாது எனக் கர்நாடக அமைச்சர் கூறியுள்ளது தொடர்பாகப் பேசுகையில், “காவிரி நீர் கிடைக்காததால் 10 லட்சம் ஏக்கர் விவசாயம் பாழாகியுள்ளது. கர்நாடகத் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு மத்திய அரசு தமிழகத்துக்குத் துரோகம் செய்கிறது. இன்னொரு பக்கத்தில், நியூட்ரினோ திட்டத்தைக் கொண்டுவந்து பென்னி குக் அணைக்கு ஆபத்தை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது” என்று அவர் குற்றம்சாட்டினார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 2 பிப் 2018