மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 பிப் 2018

வாட்ஸப் வடிவேலு

வாட்ஸப் வடிவேலு

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான வாரன் பபேட் நமக்குக் கூறும் அறிவுரை...

1. ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது ஏற்பாடு செய்து கொள். (ஒன்று நஷ்டமானாலும், மற்றொன்று நம்மைக் காப்பாற்றும்.)

2. தேவையில்லாத பொருள்களை வாங்கினால், விரைவிலேயே தேவையுள்ள அனைத்தையும் விற்க நேரிடும். (ஆடம்பரத்தைத் தவிர்த்திடுங்கள். தேவையில்லாத ஆடம்பரம் நமது சந்ததியைத் தெருவில் நிறுத்திவிடும்.)

3. சேமித்த பிறகு இருக்கும் மீதத்தைத் தான் செலவு செய்ய வேண்டும். செலவு செய்த பிறகு இருக்கும் மீதத்தைச் சேமிக்கக் கூடாது. (சேமிப்பு என்பது மிக மிக முக்கியமானது.)

4. ஆற்றின் ஆழத்தை இரண்டு கால்களாலும் அளவிடக் கூடாது. (எதிலும் முன்னெச்சரிக்கை அவசியம்.)

5. அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதே. (நஷ்டம் ஏற்பட்டாலும், வாழ்க்கையை இழக்கும் அளவுக்கு இருக்கக் கூடாது என்பதற்கான சிந்தனை.)

6. நேர்மை ஒரு விலை மதிப்பற்றது. அது அனைவரிடமும் இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள்.

இவர்களிடம் கேட்டுப் பாருங்கள்... நேரத்தின் மதிப்பை சொல்வார்கள்.

ஒரு மில்லி செகண்டின் மதிப்பை ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வாங்கியவரைக் கேட்டால் தெரியும்.

ஒரு செகண்டின் மதிப்பை விபத்தில் உயிர் தப்பியவரைக் கேட்டால் தெரியும்.

ஒரு நிமிடத்தின் மதிப்பைத் தூக்கிலிடப்படும் கைதியைக் கேட்டால் தெரியும்.

ஒரு மணி நேரத்தின் மதிப்பை உயிர்காக்க போராடும் மருத்துவரைக் கேட்டால் தெரியும்.

ஒரு நாளின் மதிப்பை அன்று வேலையில்லாத தினக்கூலி தொழிலாளரைக் கேட்டால் தெரியும்.

ஒரு வாரத்தின் மதிப்பை வாரப் பத்திரிகை ஒன்றின் ஆசிரியரைக் கேட்டால் தெரியும்.

ஒரு மாதத்தின் மதிப்பைக் குறை பிரசவம் ஆகும் ஒரு தாயைக் கேட்டால் தெரியும்.

ஒரு வருடத்தின் மதிப்பைத் தேர்வில் தோல்வியுற்ற ஒரு மாணவனைக் கேட்டால் தெரியும்.

நேரத்தை வீணாக்கும்போது கடிகாரத்தை பார்... ஓடுவது முள் அல்ல; உன் வாழ்க்கை.

இவ்ளோ தூரம் இதை படிச்சதே வேஸ்ட்டா போச்சு, ஏன்னா இது போன வருஷமே வந்துடுச்சு.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 2 பிப் 2018