மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 பிப் 2018

சுகாதாரத் துறைக்கான மத்திய பட்ஜெட்!

சுகாதாரத் துறைக்கான மத்திய பட்ஜெட்!

2018-19ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி நேற்று (பிப்ரவரி 1) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் சுகாதாரத் துறைக்கான அறிவிப்புகளைப் பற்றி காணலாம்.

மத்திய அரசின் பட்ஜெட்டில், 10 கோடி ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் உலகிலேயே அரசு நிதியில் செயல்படுத்தப்படும் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமாக இருக்கும் என்று மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

1.5 லட்சம் சுகாதார மையங்கள்

இந்தியா முழுவதும் அத்தியாவசியமான மருந்துகளையும், நோயைக் கண்டறியும் சோதனைகளையும் இலவசமாக வழங்கும் 1.5 லட்சம் சுகாதார மையங்கள் ஏற்படுத்தப்படும்.

இந்தப் புதிய இலவச மருத்துவ வசதி திட்டத்துக்காக ரூ.1,200 கோடியை நிதியை சுகாதாரத் துறைக்கு, மத்திய அரசு பட்ஜெட் ஒதுக்கீடு செய்துள்ளது.

இதையடுத்து, காச நோயாளிகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்த ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அவர்களுக்கு மாதம் ரூ.500 சிகிச்சைக்காக வழங்கப்படும். மேலும் ஆயுஷ்மான் திட்டத்தின் மூலம் பல லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்.

இலவச மருந்து மற்றும் இலவச உடல் பரிசோதனைத் திட்டங்கள் மேலும் விரிவுபடுத்தப்படும். இதைதொடர்ந்து, பிற சுகாதாரத் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மருத்துவக் காப்பீடு திட்டம்

10 கோடி ஏழைக் குடும்பங்களுக்குத் தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். அதன்படி, ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான இலவச மருத்துவ சிகிச்சைகள் காப்பீடு மூலம் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் சுமார் 50 கோடி மக்கள் பயனடைவார்கள். மேலும் இத்திட்டம் உலகிலேயே மிகப்பெரிய மருத்துவத்துக்கான நிதி ஒதுக்கீடு திட்டம் ஆகும்.

24 அரசு மருத்துவக் கல்லூரிகள்

இந்தியா முழுவதும் புதிதாக 24 அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும். மாவட்ட மருத்துவமனைகளின் தரம் உயர்த்தப்பட்டு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளாக மாற்றப்படும். இதன்மூலம் மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மருத்துவக் கல்லூரி இருப்பதை உறுதி செய்யப்படும்.

தூய்மை இந்தியா திட்டம்

தூய்மை இந்தியா திட்டத்தின் மூலமாகக் கிராம ஊராட்சி பகுதிகளில் பொதுச் சுகாதாரம், தனிநபர் இல்ல கழிப்பறை வசதிகள் அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் பொதுமக்களுக்குக் கழிவறைகள் கட்டித் தரப்பட்டு வருகிறது.

தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் இதுவரை 6 கோடி கழிவறைகள் நாடு முழுவதும் கட்டப்பட்டுள்ளன. மேலும் 2 கோடி புதிய கழிவறைகளைக் கட்டித்தர அரசு திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார்.

சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

மத்திய அரசின் பட்ஜெட்டுக்குத் தமிழகச் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வெள்ளி 2 பிப் 2018