மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 பிப் 2018

சோனியா தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை!

சோனியா தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை!

டெல்லியில் சோனியா காந்தி தலைமையில் நேற்று (பிப்ரவரி 1) எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு சார்பில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் குறித்த இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலக அரங்கில் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

இதில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அகமது பட்டேல், குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜூன் கார்கே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் ஜெய் பிரகாஷ் நாராயண் யாதவ், திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் டெரிக் ஓ ப்ரேன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா உட்பட பல தலைவர்கள் கலந்துகொண்டனர். மொத்தம் 17 கட்சிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டன.

இந்தக் கூட்டத்தில், முத்தலாக் மசோதா, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விவகாரம் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் சமீபத்தில் ஏற்பட்ட இன மோதல் உள்ளிட்டவை குறித்தும் பட்ஜெட் கூட்டத்தொடரில் பாஜகவுக்கு நெருக்கடி கொடுப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைப்பது குறித்தும், தேசிய பிரச்னைகளில் ஒன்றிணைந்து போராட்டுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி கடந்த டிசம்பர் மாதம் பொறுப்பேற்றாலும் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவராக சோனியா காந்தியே தற்போதும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

வெள்ளி 2 பிப் 2018