மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 பிப் 2018

கிச்சன் கீர்த்தனா: கீரைப் பொரியல்!

கிச்சன் கீர்த்தனா: கீரைப் பொரியல்!

‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் மனம் வாடினேன்’ என்ற வரிகள் மதிய உணவில் கீரைப் பொரியல் சாப்பிடும்போது வரத்தான் செய்யும். அதையெல்லாம் பார்த்தால் முடியுமா? வாடிய பயிர்களுக்கு நீர் ஊற்றுவோம்; நாமும் வாடாமல் இருக்க வாருங்கள். இன்று ஒரு கீரைப் பொரியல் செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

முருங்கைக் கீரை - 2 கப், வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது), சர்க்கரை - கால் டீஸ்பூன், துருவிய தேங்காய் - கால் கப், உப்பு - தேவையான அளவு.

தாளிப்பதற்கு: எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - முக்கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2.

செய்முறை:

முதலில் முருங்கைக் கீரையை ஆய்ந்து நீரில் கழுவி, நீரை முற்றிலும் வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும். பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு, பொன்னிறமாக வதக்கி விட வேண்டும். அடுத்து அதில் முருங்கைக் கீரையைச் சேர்த்து, உப்பு மற்றும் சர்க்கரை போட்டு, நன்கு வதக்கி விடவும். வேண்டுமானால், அதில் சிறிது தண்ணீர் தெளித்துப் புரட்டி, மிதமான தீயில் 5-10 நிமிடங்கள் கீரையை நன்கு கிளறிவிட்டு வேக வைக்க வேண்டும். எப்போது கீரையின் அளவானது நன்கு சுண்டி பாதியாகக் காட்சியளிக்கிறதோ, அப்போது அதில் துருவி வைத்துள்ள தேங்காயைச் சேர்த்து, ஒருமுறை கிளறி விட்டு இறக்கினால், சுவையான முருங்கைக் கீரை பொரியல் ரெடி!

கீர்த்தனா தத்துவம்:

சட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை ‘ஒழுங்கில்லாதவன்’னு சொல்லும் சமூகம், காலர் பட்டனையும் சேர்த்துப் போட்டால், ‘லூஸு’ எனச் சொல்லிவிடுகிறது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 2 பிப் 2018