மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 பிப் 2018

கார்பன் டேட்டிங் பரிசோதனைக்கு நிதி ஒதுக்க உத்தரவு!

கார்பன் டேட்டிங் பரிசோதனைக்கு நிதி ஒதுக்க உத்தரவு!

‘ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள்களுக்கு கார்பன் டேட்டிங் செய்ய நிதி ஒதுக்க வேண்டும்’ என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

காமராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், ‘ஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சியைத் தொடங்க வேண்டும். நான்கு கட்டமாக அகழ்வாராய்ச்சி நடந்துள்ளபோதும் அதுகுறித்த அறிக்கை எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்’ என கூறியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று (பிப்ரவரி 1) நீதிபதிகள் கிருபாகரன், தரணி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சி நடத்திய அலுவலர் சத்தியமூர்த்தி ஆஜராகி விளக்கமளித்தார். ‘ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்கள் தோராயமாக 4000 ஆண்டுகளுக்குப் பழைமையானவை. சரியான காலத்தை கண்டறிய கார்பன் டேட்டிங் பரிசோதனை நடத்த வேண்டும். இந்த பரிசோதனை செய்வதற்குத் தேவையான நிதியைத் தமிழக அரசு ஒதுக்க வேண்டும்’ எனக் கூறினார்.

இதையடுத்து, ‘கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள்களுக்கு கார்பன் டேட்டிங் செய்ய இரண்டு வாரங்களில் நிதி ஒதுக்க வேண்டும்’ என உத்தரவிட்ட நீதிபதிகள், அகழ்வாராய்ச்சி நடந்த பகுதியில் 24 மணி நேரமும் போலீஸார் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டனர். நான்காம் கட்ட அறிக்கைக்குத் தேவையான உதவிகளை மத்திய அல்லது மாநில அரசுகள் செய்து கொடுக்குமா என்பதை பிப்ரவரி 18ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 2 பிப் 2018