மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 பிப் 2018

இந்தி(ய) பட்ஜெட்: குவியும் கண்டனங்கள்!

இந்தி(ய) பட்ஜெட்: குவியும் கண்டனங்கள்!

நாடாளுமன்றத்தில் 2018-19 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி நேற்று (பிப்ரவரி 1) தாக்கல் செய்தார். பட்ஜெட் ஆங்கிலத்தில் தாக்கல் செய்யப்படுவதுதான் வழக்கம். ஆனால், நேற்றைய பட்ஜெட்டோ இந்தி மொழியில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டை இந்தியில் தாக்கல் செய்ததைக் கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இந்தியில் பட்ஜெட் தாக்கல் செய்யபட்டது தொடர்பாக பேசிய வைகோ, "இதுவரை ஆங்கிலத்தில் மட்டும்தான் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வந்தது. ஆனால், இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் இந்தியிலும் தாக்கல் செய்து இருக்கிறார். எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டால் மட்டுமே வரவேற்கத்தக்கது. அனைத்துத் துறைகளிலும் மிக வேகமாக இந்தியைத் திணித்து வருகிற மத்திய அரசினுடைய இந்தி ஆதிக்க வெறி பட்டவர்த்தனமாகத் தெரிகிறது” என்று கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், “சுதந்திர இந்தியாவின் நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக, மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை ஆங்கிலத்தில் அல்லாமல் இந்தி மொழியில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. நிதியமைச்சர் அருண் ஜேட்லி இவ்வாறு செய்திருப்பது, அந்நிய மொழியைத் தவிர்த்து ஓர் இந்திய மொழியில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது என்று மேலோட்டமாக எடுத்துக்கொண்டு மகிழ்வதற்கானதல்ல. மாறாக, அப்படியோர் எண்ணத்தை ஏற்படுத்தி, பாஜகவின் ஒற்றை மொழி ஆதிக்கக் கொள்கைப்படி இந்தியைத் திணிக்கிற ஏற்பாடேயாகும்” என்று கூறியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வெள்ளி 2 பிப் 2018