மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 பிப் 2018

ஹெல்த் ஹேமா: ஆரோக்கிய பொடிகளும் அற்புத பலன்களும்!

ஹெல்த் ஹேமா: ஆரோக்கிய பொடிகளும் அற்புத பலன்களும்!

அறுகம்புல் பொடி: அதிக உடல் எடை, கொழுப்பைக் குறைக்கும். சிறந்த ரத்தசுத்தி.

நெல்லிக்காய் பொடி: பற்கள், எலும்புகள் பலப்படும். வைட்டமின் சி உள்ளது.

தூதுவளை பொடி: நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வறட்டு இருமலுக்கு சிறந்தது.

துளசி பொடி: மூக்கடைப்பு, சுவாசக் கோளாருக்குச் சிறந்தது.

ஆவரம்பூ பொடி: இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

கண்டங்கத்திரி பொடி: மார்பு சளி, இரைப்பு நோய்க்குச் சிறந்தது.

ரோஜாப்பூ பொடி: ரத்தக் கொதிப்புக்குச் சிறந்தது. உடல் குளிர்ச்சியாகும்.

கடுக்காய் பொடி: குடல் புண்ணை ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

வில்வம் பொடி: அதிகமான கொழுப்பைக் குறைக்கும். ரத்தக் கொதிப்புக்குச் சிறந்தது.

அமுக்கலா பொடி: தாது புஷ்டி, ஆண்மை குறைபாட்டுக்குச் சிறந்தது.

சிறுகுறிஞான் பொடி: சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

நவால் பொடி: சர்க்கரை நோய், தலைசுற்றுக்குச் சிறந்தது.

வல்லாரை பொடி: நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

ஓரிதழ் தாமரை பொடி: ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும். வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா.

ஜாதிக்காய் பொடி: நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

சிறியாநங்கை பொடி: அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

கீழாநெல்லி பொடி: மஞ்சள் காமாலை, சோகை நோய்க்குச் சிறந்தது.

முடக்கத்தான் பொடி: மூட்டுவலி, முழங்கால்வலி, வாதத்துக்கு நல்லது.

கோரைக்கிழங்கு பொடி: தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்புக்குச் சிறந்தது.

திப்பிலி பொடி: உடல்வலி, அலுப்பு, சளி, இருமலுக்குச் சிறந்தது.

வெந்தய பொடி: வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

நிலவாகை பொடி: மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

நாயுருவி பொடி: உள், வெளி, நவ மூலத்துக்குச் சிறந்தது.

கறிவேப்பிலை பொடி: கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.

வேப்பிலை பொடி: குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

திரிபலா பொடி: வயிற்றுபுண் ஆற்றும். அல்சரைக் கட்டுப்படுத்தும்.

அதிமதுரம் பொடி: தொண்டை கமறல், வறட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

துத்தி இலை பொடி: உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்தது.

செம்பருத்திப்பூ பொடி: அனைத்து இதயநோய்க்கும் சிறந்தது.

கரிசலாங்கண்ணி பொடி: காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்குச் சிறந்தது.

குப்பைமேனி பொடி: சொறிசிரங்கு, தோல் வியாதிக்குச் சிறந்தது.

பொன்னாங்கண்ணி பொடி: உடல் சூடு, கண் நோய்க்குச் சிறந்தது.

மணத்தக்காளி பொடி: குடல் புண், வாய்ப்புண், தொண்டைப்புண் நீங்கும்.

நெருஞ்சில் பொடி: சிறுநீரகக் கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

பிரசவ சாமான் பொடி: பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும். உடல் வலிமை பெறும். தாய்ப்பாலுக்குச் சிறந்தது.

கஸ்தூரி மஞ்சள் பொடி: தினசரி பூசிவர முகம் பொலிவு பெறும்.

பூலாங்கிழங்கு பொடி: குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

வசம்பு பொடி: பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

சோற்று கத்தாழை பொடி: உடல் குளிர்ச்சி, முகப்பொலிவுக்குப் பயன்படும்.

மருதாணி பொடி: கை கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

கருவேலம்பட்டை பொடி: பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.

சித்தரத்தை பொடி: சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

பொடுதலை பொடி: பேன் உதிரும், முடி உதிர்வதைத் தடுக்கும்.

சுக்குப் பொடி: ஜீரண கோளாறுகளுக்குச் சிறந்தது.

முருங்கை விதை பொடி: ஆண்மை சக்தி கூடும்.

லவங்கபட்டை பொடி: கொழுப்புச்சத்தைக் குறைக்கும். மூட்டுவலிக்குச் சிறந்தது.

வாத நாராயணன் பொடி: பக்கவாதம், கை கால் மூட்டுவலி நீங்கும்.

பாகற்காய் பொடி: குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

வாழைத்தண்டு பொடி: சிறுநீரகக் கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

ஆடாதொடை பொடி: சுவாசக் கோளாறு, ஆஸ்துமாவுக்குச் சிறந்தது.

கருஞ்சீரகப் பொடி: சர்க்கரை, குடல் புண் நீங்கும். நஞ்சு வெளிப்படும்.

வெட்டி வேர் பொடி: நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும். முகம் பொலிவு பெறும்.

வெள்ளருக்குப் பொடி: ரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடி வயிற்று வலி நீங்கும்.

நன்னாரி பொடி: உடல் குளிர்ச்சி தரும். சிறுநீர் பெறுக்கி. நா வறட்சிக்குச் சிறந்தது.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 2 பிப் 2018