மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 பிப் 2018

கிரண்பேடி - நாராயணசாமி சந்திப்பு!

கிரண்பேடி - நாராயணசாமி சந்திப்பு!

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை நேற்று (பிப்ரவரி 1) சந்தித்துப் பேசியுள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கிரண்பேடி பதவியேற்றது முதல் அவருக்கும் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கும் பல்வேறு பிரச்னைகள் நிலவி வருகின்றன. ஆளுநர் கிரண்பேடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் பணிகளில் தலையிடுவதாக முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டி வந்தார்.

கடந்த ஆண்டு பாஜகவைச் சார்ந்த மூன்று உறுப்பினர்களை நியமன சட்டப்பேரவை உறுப்பினர்களாக தன்னிச்சையாகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்வுக்குப் பிறகு நாராயணசாமிக்கும் கிரண்பேடிக்கும் இடையேயான மோதல் முற்றியது. கடந்த வாரம் திருவண்ணாமலையில் செய்தியாளர்களைச் சந்தித்த நாராயணசாமி, தமிழக மற்றும் புதுச்சேரி ஆளுநர்கள் வரம்பை மீறி செயல்படுவதாகக் குற்றம்சாட்டியிருந்தார். மேலும், ஆளுநர் கிரண்பேடி கடந்த ஜனவரி 16ஆம் தேதி புதுவை அரசின் நிதி நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்து பேசியிருந்தார்.

இந்த நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை முதல்வர் நாராயணசாமி நேற்று (பிப்ரவரி 1) சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பின்போது, புதுச்சேரியின் நிர்வாக ரீதியான பிரச்னைகள் மற்றும் அதிகாரிகளின் பணியிடை மாற்றம் தொடர்பாகப் பேசப்பட்டதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 2 பிப் 2018