மருத்துவச் சீட்டு: மோசடி செய்த நபர் கைது!


அரசு வேலை வாங்கி தருவதாகவும் கல்லூரிகளில் இடம் வாங்கி தருவதாகவும் கூறி மக்களிடமிருந்து பணம் மோசடி செய்வது குறித்து தினந்தோறும் செய்திகள் வந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில், மருத்துவச் சீட்டு வாங்கி தருவதாகக் கூறி இருபதுக்கும் மேற்பட்டோரிடம் கோடிக்கணக்கில் பணத்தைப் பெற்றுக்கொண்டு தலைமறைவான நபரை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
சென்னையைச் சேர்ந்த குமார் என்பவர் தனது மகனுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கி தருவதற்காக ராஜேஸ்வரன் என்பவரிடம் 2013ஆம் ஆண்டு ரூ.35 லட்சத்தைக் கொடுத்துள்ளார். அவரும் புனேயில் உள்ள மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கி தருவதாகக் கூறியுள்ளார். ஆனால், பணத்தைப் பெற்றுக்கொண்ட ராஜேஸ்வரன் தலைமறைவானார். இதுகுறித்து குமார் போலீஸில் புகார் அளித்தார். புகாரின்படி, மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் அவரைத் தேடிவந்தனர். பின்பு, தர்மபுரியில் வைத்து ராஜேஸ்வரனைக் கைது செய்தனர்.