மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 பிப் 2018

இந்திக்கு மாறிய கூகுள்!

இந்திக்கு மாறிய கூகுள்!

கூகுள் அசிஸ்டன்ஸ் வசதியில் இந்தி மொழியை கூகுள் நிறுவனம் சேர்த்துள்ளது.

இந்தியாவைப் பெரிய வர்த்தக மையமாகக்கொண்டுள்ள கூகுள் நிறுவனம் இந்தியப் பயனர்களைக் கவர்வதற்காக அதிக முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளது. அதன்படி கூகுள் நிறுவனத்தின் பல்வேறு அப்டேட்கள் இந்தியாவை மையமாக வைத்தே இருக்கும் எனலாம். அதன்படி ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களில் பயன்படும் siri வசதியைப் போல் கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு மாடல்களில் கூகுள் அசிஸ்டன்ஸ் என்ற வசதியை வழங்கி இருந்தது.

ok google என்ற வாய்ஸ் கமென்ட் மூலம் இந்த வசதியைத் தொடங்க இயலும். ஆனால், அதில் ஆங்கிலத்தில் பேசி அதன் மூலம் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற முறை இருந்தது. ஆனால், தற்போது ஆங்கிலத்தில் மட்டுமின்றி இந்தியில் பேசியும் இந்த வசதியை பயன்படுத்தலாம் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் பயனர்கள் இந்தியில் தங்களது கேள்விகளை எழுப்பி பதிலையும் இந்தியிலேயே பெற்றுக்கொள்ளலாம்.

இந்த வாய்ஸ் கமென்ட் வசதியானது பயனர்கள் மொபைலை கைகளில் எடுக்காமல் ஒருவருக்கு தகவல்களை அனுப்பவும், அழைப்பை ஏற்படுத்தவும் உதவுகிறது. அதுமட்டுமின்றி பயனர்கள் அவர்களுக்கு தேவையான தகவல்களை எளிதில் பெற்றுக்கொள்ள இந்த வசதி உதவியாக இருந்து வருகிறது. இதில், தற்போது இந்தியில் புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளதால், இந்திய பயனர்கள் மேலும் எளிமையாக இந்த வசதியைப் பயன்படுத்தலாம் என கூகுள் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

கூகுள் நிறுவனத்தின் புதிய அப்டேட்டில் இந்த வசதி இணைக்கப்பட்டுள்ளது என்றும், புதிய வெர்ஷன் பயன்படுத்தும் நபர்கள் இதைப் பயன்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

வெள்ளி 2 பிப் 2018