வருமான வரிச் சலுகையில் ஏமாற்றம்!


பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் வருமான வரி வரம்பு மாற்றப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளாகவே மத்திய அரசு தனிநபர் வருமான வரி விசயத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதால் இப்போது எவ்வித மாற்றமும் செய்யவில்லை என்று அருண் ஜேட்லி தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார். பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பிறகு வரிச் செலுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், 2014-15ஆம் ஆண்டில் 6.47 கோடியாக இருந்த வரிச் செலுத்துவோர் எண்ணிக்கை 2016-17ஆம் ஆண்டில் 8.27 கோடியாக உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.