மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 பிப் 2018

அமெரிக்கா செல்லும் கமல்

அமெரிக்கா செல்லும் கமல்

விஸ்வரூபம் 2 படத்தின் பணிகளுக்காக கமல் இன்று (பிப்ரவரி 1) அமெரிக்கா செல்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அரசியல் பணிகளை மும்முரமாக மேற்கொண்டுவரும் கமல் தனது படவேலைகளில் தேக்கம் விழாதபடி தொடர்ந்து அதிலும் கவனம் செலுத்திவருகிறார். விஸ்வரூபம் 2 படத்தின் இறுதிகட்டப் பணிகளை ஹாலிவுட் கலைஞர்களைக் கொண்டு அமெரிக்காவில் செய்துவரும் அவர் தற்போது மீண்டும் அமெரிக்காவுக்குச் செல்கிறார். ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் ஆடியோ சம்பந்தமான பணிகளை அங்குள்ள ஸ்டுடியோவில் செய்திருந்ததைத் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

விஸ்வரூபம் பணிகளுக்கிடையே பிப்ரவரி 10ஆம் தேதி ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பிரச்சினைகள் குறித்து உரையாற்றுகிறார்.

பிப்ரவரி 16ஆம் தேதி தனது பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பும் கமல் பிப்ரவரி 21ஆம் தேதி ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் இல்லத்திலிருந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. மக்களைச் சந்திக்கும் அவரது அரசியல் சுற்றுப்பயணத்திற்கு நாளை நமதே என பெயரிடப்பட்டுள்ளது.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

வியாழன் 1 பிப் 2018