மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 பிப் 2018

கல்வித் துறைக்கான அறிவிப்புகள்!

கல்வித் துறைக்கான அறிவிப்புகள்!

மத்திய பாஜக ஆட்சியின் கடைசி பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று (பிப்ரவரி 1) காலையில் தாக்கல் செய்தார்.

2018- 2019ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் கல்வித்துறை தொடர்பான அவருடைய உரையின் சிறப்பம்சங்கள் குறித்துக் காண்போம்.

>> ரூ.1,00,000 கோடி முதலீட்டுடன் வரும் 2022ஆம் ஆண்டுக்குள் கல்வித் துறைக்கான உள்கட்டமைப்பு மற்றும் அமைப்பு முறைகளைப் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

>>கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பரவல் அதிகரிக்கப்படும். (உதாரணமாகக் கரும்பலகையிலிருந்து டிஜிட்டல் பலகைக்கு மாறுவது).

>> கல்வியைப் பொறுத்தவரை நர்ஸரி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை முழுமையான மற்றும் சமமான சேவை வழங்கப்பட வேண்டும். அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.

>> வருகிற 2022ஆம் ஆண்டிற்குள் 50 சதவிகிதத்திற்கு மேற்பட்ட பழங்குடியினர் வாழும் பகுதிகளில் நவோதயா பள்ளிகளோடு ஏகலவ்யா (குடியிருப்பு பள்ளி) பள்ளிகளும் நிறுவப்படும். இதன் மூலம் குறைந்தது 20,000 பழங்குடியின மக்கள் பயன் பெறுவர். இத்தகைய பள்ளிகளின் மூலம் உள்ளூர் கலை, கலாச்சாரம், விளையாட்டு மற்றும் திறன் வளர்ச்சியும் மேம்படும்.

>> பிரதம மந்திரி ஆராய்ச்சித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு அதன் கீழ் 1000 பி.டெக் மாணவர்களின் மேற்படிப்பிற்கு பி.எச்.டி செய்வதற்கென ஐ.ஐ.டியில் வாய்ப்புகள் செய்து தரப்படும்.

>> திட்டமிடல் மற்றும் கட்டிடக் கலைக்கான புதிய பள்ளிகள் அமைக்கப்படும்.

>> ஐ.ஐ.டி மற்றும் என்.ஐ.ஐ.டியில் மேலும் 18 கல்லூரிகள் தொடங்கப்படும்.

>> தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி கல்வித் தரம் உயர்த்தப்படும். அண்மையில் வெளியிடப்பட்ட ’DIKSHA’ தொழில்நுட்பத்தின் மூலம் ஆசிரியர்களின் திறன்கள் மேம்படுத்தப்படும். கல்வி மற்றும் ஆசிரியர்களின் தரத்தை மேம்படுத்த ஆசிரியர்களுக்கான பட்டப்படிப்பு ஒருங்கிணைக்கப்படும்.

>> 2018 ஆம் ஆண்டில் 24 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 1 பிப் 2018