மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 பிப் 2018

நம்பிக்கையுடன் நாளை ஐந்து படங்கள் ரிலீஸ்!

நம்பிக்கையுடன் நாளை  ஐந்து படங்கள் ரிலீஸ்!

இராமானுஜம்

ஜனவரி மாதத்தில் 14 படங்கள் ரிலீஸ் ஆனது. இதில் எந்த படமும் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் ஹிட் அடிக்கவில்லை.

பிப்ரவரி 2ம் தேதி வெள்ளிக்கிழமை 5 படங்கள் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருக்கும் சூழலில் கடைசி நேர மாறுதல்கள் நிகழ்ந்து படங்கள் குறையலாம்.

விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக், காயத்ரி, நிஹாரிகா நடித்துள்ள ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ இப்படத்தை ஆறுமுககுமார் இயக்கி உள்ளார். நாளை வெளிவருவதில்இந்த படம் மட்டுமே வியாபாரமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இப்படத்தின் தமிழ்நாடு தியேட்டர் உரிமை சுமார் 10 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

6 கேண்டில்ஸ் படத்தை இயக்கிய வி.இசட்.துரை இயக்கியுள்ள படம் ‘ஏமாலி’. சமுத்திரக்கனி, அதுல்யா, சாம் ஜோன்ஸ், ரோஷினி ஆகியோர் நடித்திருக்கின்றனர். அஜீத் நடித்து வெளியான முகவரி படத்தில் இயக்குனராக அறிமுகமான துரை இயக்கிய எந்த படமும் வெற்றி பெற்றதில்லை. புதுமையான திரைக்கதையுடன் அதாவது ஒவ்வொரு காலகட்டத்திலுமாக 4 கதாபாத்திரங்களில் நட்சத்திரங்கள் ஏமாலி படத்தில் நடித்துள்ளதாக கூறும் துரை ஏமாலி வெற்றி பெறும் என நம்பிக்கையுடன் கூறுகிறார். விநியோக அடிப்படையில் ஏமாலி ரீலீஸ் செய்யப்படுகிறது.

விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடித்திருக்கும் இரண்டாவது படம் மதுரவீரன். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட இப்படம் பொங்கல் போட்டி யில் களமிறங்க தயாராக இருந்தது. தியேட்டர் கிடைக்காததால் தற்போது ரீலீஸ் செய்யப்படுகிறது. ஏற்கனவே சண்முக பாண்டியன் நடிப்பில் சகாப்தம் படம் கடந்த 2015ம் ஆண்டு திரைக்கு வந்தது. ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

இயக்குனர் பாரதிராஜா முன்னாள் ராணுவ அதிகாரியாக நடித்திருக்கும் படம் படைவீரன். அவரது பேரனாக விஜய் யேசுதாஸ் நடித்திருக்கிறார். மணிரத்னம் உதவியாளர் தனா இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். தமிழ்நாடு முழுவதும் விநியோக முறையில் ரீலீஸ் செய்யப்படுகிறது.

ராஜ் சூர்யா, ராம் சரவணா நடித்திருக்கும் விசிறி. இப்படத்தை வெற்றி மகாலிங்கம் இயக்கியிருக்கிறார். இவர் வெண்ணிலா வீடு படத்தை இயக்கியவர்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 1 பிப் 2018