மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 பிப் 2018

கள்ளத் துப்பாக்கி கடத்தல்: சிபிசிஐடிக்கு மாற்றம்!

கள்ளத் துப்பாக்கி கடத்தல்: சிபிசிஐடிக்கு மாற்றம்!

சென்னையில் பிடிபட்ட கள்ளத் துப்பாக்கிகள் மற்றும் கள்ள நோட்டு தொடர்பான வழக்கு சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றப்படுகிறது.

கவுஹாத்திலிருந்து சென்னைக்கு கள்ளத் துப்பாக்கிகள் மற்றும் கள்ள நோட்டுகள் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து வேப்பேரி போலீஸார் திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர். இதில் அந்த ரயிலில் பயணம் செய்த பிரதீப், கமல் ஆகியோரிடமிருந்து 5 கள்ளத்துப்பாக்கிகள் மற்றும் ரூ.4 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் சிக்கியது. பின்னர் அவர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சியில், சென்னையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான நாகராஜ், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சிவா உள்ளிட்ட 3 பேர் தங்கும் விடுதி ஒன்றில் ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது அவர்களிடமிருந்து 2 கள்ளத்துப்பாக்கிகள் சிக்கின. பின்னர் ஆட்டோ ஓட்டுநர் நாகராஜின் சகோதரியும் தாயும் சென்னையில் கள்ள நோட்டுகளுடன் பிடிபட்டனர். இந்த இரு வழக்குகளும் வெவ்வேறானவை என்றாலும் முதல் வழக்கை திசைதிருப்பவே இரண்டாவது வழக்கில் உள்ளவர்களைச் சிக்க வைத்ததாக போலீஸ் தரப்பில் ஒரு தகவல் வெளியானது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வியாழன் 1 பிப் 2018