மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 பிப் 2018

ரயில்வே மேம்பாட்டுக்கான அறிவிப்புகள்!

ரயில்வே மேம்பாட்டுக்கான அறிவிப்புகள்!

2018-19ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று நிதியமைச்சர் அருண் ஜேட்லியால் தாக்கல் செய்யப்பட்டது. இதில் ரயில்வே துறை தொடர்பான அறிவிப்புகள் பற்றிக் காணலாம்.

ரயில்வே துறை மேம்பாட்டுக்கு மொத்தம் ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 4267 ஆளில்லா லெவல் கிராசிங்குகள் நீக்கப்பட்டு அங்கு பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் சிசிடிவி கேமிரா பொருத்தும் பணிகள் விரைவுபடுத்தப்படும். ரயில் தண்டவாளங்கள் பராமரிப்புக்குக் கூடுதல் முக்கியத்துவம் தரப்படும். அனைத்து நிலையங்களிலும் வைஃபை வசதி ஏற்படுத்தப்படும். 600 முக்கிய ரயில் நிலையங்கள் புனரமைக்கப்படும்.

3,600 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரயில் பாதைகள் சீரமைக்கப்படும். 4,000 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய ரயில் பாதைகள் 2019ஆம் ஆண்டுக்குள் அமைக்கப்படும். பனி மூட்டத்தால் விபத்துகள் ஏற்படுவதைத் தவிர்க்க சிறப்புக் கருவிகள் பொருத்தப்படும். 25,000 பேருக்கு மேல் வந்து செல்லும் ரயில் நிலையங்களில் எஸ்கலேட்டர் வசதி அமைக்கப்படும்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 1 பிப் 2018