மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 பிப் 2018

நடுவுல கொஞ்சம் பட்ஜெட்டை காணோம்: அப்டேட் குமாரு

நடுவுல கொஞ்சம் பட்ஜெட்டை காணோம்: அப்டேட் குமாரு

பட்ஜெட் எப்படி இருக்குன்னு கேட்டா இது நடுநிலையான பட்ஜெட்டுன்னு ஒருத்தர் சொல்றாரு, ஒருத்தர் நடுவுல கொஞ்சம் பட்ஜெட்டையே காணோம்னு சொல்றாரு. அது பத்தி நம்ம டிவிட்டர் கண்மணிகள் போதுமான அளவு கீழ கருத்து சொல்லிட்டு இருக்காங்க. அதனால நாம கமல் மேட்டருக்கு வருவோம். கமல் விகடன்ல எழுதுற தொடர்ல ஒரு கவிதை ஒன்னு போட்ருக்காரு. கவிதை அபாரமா இருக்குன்னு ஆண்டவரோட பக்தர்கள் சிலாகிச்சுட்டு இருந்தப்ப தான் கமல் அந்த டிவிட்டை போட்ருக்காரு. என்னன்னா... விகடன்ல வந்த கவிதை போன்ல நான் சொல்ல சொல்ல டைப் பண்ணுனதால நிறைய ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்குன்னு. இது தெரியாம.. ஒன்னும் புரியாம தான் இவங்க ரசிச்சுகிட்டு இருந்தாங்களா? இதை எப்படி ப்ரூப் பார்க்காம போட்ருப்பாங்கன்னு நண்பர்ட்ட கேட்டேன். அதுக்கு அவர் சொல்றாரு.. “அவங்களுக்கு தமிழ் தெரியும். கமல் தமிழ் தெரியாதே.” அது என்னமோ உண்மை தான். கமல் டிவிட் எல்லாம் அவங்க கண் முன்னாடி வந்து போயிருக்குமா இல்லையா..

@itzkarthik_v

ஒரு நல்ல செயல் உன்னால் மட்டுமே சாத்தியம் என்றால் அதை செய்துமுடிக்க தடையாக கடவுளே கோடு கிழித்தலும் மீறுவது தவறல்ல....

@vishnut87

இந்தியாவில் இன்னும் 2 வருடத்தில் பொது வருமானம் வழங்கும் திட்டம். . .

ஒருவனை ஏமாற்ற வேண்டும் என்றால் அவன் ஆசையை தூண்ட வேண்டும்.

@Thaadikkaran

குடியரசு தலைவருக்கு சம்பளம் 5 லட்சமாக உயர்வு - அருண் ஜெட்லி

மலர் தூவுவாறு, போட்டோக்கு போஸ் கொடுப்பாரு. கருணை மனு நிராகரிப்பாரு அதுக்கு அம்புட்டு சம்பளமா

@Thaadikkaran

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நின்றதால் நானும் ஒரு

அரசியல்வாதி தான் - நடிகர் விஷால்

நானும் ரவுடிதான், எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது..!

@Ashok_Apk

இவிங்கெ பெத்துபோட்ட பட்ஜெட் சிசைரிங்கா?இல்ல சுக பிரசவமா?

@JanuBhaskar

பழங்குடி மக்களுக்கு ஏகலைவ பள்ளிகள் – அருண் ஜெட்லி.

எப்படி?

தூர இருந்தே கவனிச்சு தானா கத்துக்கணுமா?

அப்புறம் ஒரு துரோணர் வந்து வலது கை கட்டைவிரலைக் கேக்க மாட்டாரே.

@Kozhiyaar

பெரும்பாலும் நண்பர்களுடன் பணமில்லா பரிவர்த்தனை தான் நடந்து கொண்டிருக்கும்!!

@Kozhiyaar

பிழைக்க வழி கிடைத்தவுடன், வாழும் வழிமுறையை மறந்து விடுகிறோம்!!!

@HAJAMYDEENNKS

10 கோடி மக்களுக்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கப்படும் - அருண் ஜேட்லி #

இதுலாம் 10 வருசத்துக்கு முன்னாடியே கலைஞர் பண்ணிட்டாரு...!

@Kndhavi

வருமான வரி உச்ச வரம்பு 5 லட்சம் ஆக்க வேண்டும் என்று காங்கிரஸ் கவர்மெண்டை எதிர்த்து போராட்டம் நடத்தியது பி ஜே பி கட்சி ..பதவிக்கு வந்து ஐந்து ஆண்டு ஆகி தன் கடைசி பட்ஜெட்டை வாசிக்கும் போதும் 5 லட்சம் ஆக்க வில்லை.

குருமூர்த்தி, எஸ்விசேகர்லாம் காணும்..அமைதியா இருக்கு டிவிட்டர்.

@dsureshkumar

"இது நடுநிலையான பட்ஜெட்"

அய்யா நடுவுல கொஞ்ச பக்கத்தை காணோம் அதை கவனிச்சிங்களா?

@HAJAMYDEENNKS

மிடில் க்ளாஸ் மக்கள் மாதிரி எந்த நிதி மந்திரியும் பட்ஜெட் போட முடியாது...!

@mohanramko

வறுமையில் இருக்கும் சூப்பர் சிங்கர்களுக்கு

'பாட'சாலைகள் மட்டுமே கிடைக்கின்றன

@Kozhiyaar

வாழ்க்கையில் எல்லா நிகழ்வுகளும் சிங்கிள் டேக்கில் எடுக்கப்படும் காட்சிகளே!!

நடிப்பதற்கு அதிகவனமும் பயிற்சியும் தேவை!!

@amuduarattai

வயது அதிகரிக்க அதிகரிக்க, கூடவே ,நாம் உண்ணக்கூடாத, உணவு பொருட்களின் பட்டியலும் அதிகரிக்கிறது.

@mekalapugazh

கிராமங்கள் இந்தியாவின் முதுகெலும்புன்னு சொன்னதற்குப் பதிலாக..

கிராமங்கள் இந்தியாவின்

முகம் என்றுசொல்லியிருந்தால்..

மேக்கப் போட்டாவது அழகாக்கியிருப்போம்ல.

@mujib989898

தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாது என கூறியதால் பாஜகவுடன் விரோதம் என அர்த்தமில்லை #ஓபிஎஸ்

நேற்று ஆடு வெட்ட அருவா தூக்கல புல்லு வெட்ட தான்னு சொல்றாரு

@gowrisa28263028

தற்போது ..

"கட்டுடல்" என்றால் மனித மனங்களில்

ஞாபகம் வருவதெல்லாம்

மருத்துவமனைகள் தான்.

@mohanramko

மூக்கு கண்ணாடி போட்டால் அழகாக இருப்போம் என்று 'ஐ வாஷ்' செய்து விடுகிறார்கள் கண் டாக்டர்கள்

@ajmalnks

பெண்கள் அதிகம் கஷ்டப்படக்கூடாது என்பதற்காகவே உருவாக்கப்பட்ட உணவுகளில் இட்லியும்,உப்புமாவும் ஒன்று.

@madurai_jinna

ரஜினி மக்கள் மன்றத்தின்

லோகோவில் இருந்து

பாம்பு படத்தையும் நீக்க

ரஜினி உத்தரவு.!

மொத்தமாக

எல்லாத்தையும் நீக்க

மக்கள் உத்தரவு.!

@ajmalnks

10 கோடி ஏழை குடும்பங்களின் சுகாதாரத்திற்காக தலா ரூ.5 லட்சம் ரூபாய் வழங்கப்படும். இதற்காக ரூ.1200 கோடி ஒதுக்கீடு - செய்தி

அப்போ அந்த 15 லட்சம்?

-லாக் ஆஃப்

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 1 பிப் 2018