மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 பிப் 2018

25 வருடங்களாகப் பெற முடியாத வெற்றி!

25 வருடங்களாகப் பெற முடியாத வெற்றி!

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று (பிப்ரவரி 1) டர்பனில் தொடங்குகிறது.

தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரைத் தென்னாப்பிரிக்க அணி 2-1 என கைப்பற்றியது. அதன் தொடர்ச்சியாக இன்று தென்னாப்பிரிக்கா உடனான ஒருநாள் போட்டியில் இந்திய அணி களம் காண்கிறது.

கடந்த 1993ஆம் ஆண்டு முதல் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற அனைத்து தொடர்களையும் தென்னாப்பிரிக்கா அணியே வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக 2013ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் இந்திய அணி விளையாடியபோதும் தென்னாப்பிரிக்க அணி 2-0 என வெற்றி பெற்றது. அதேபோல் இந்தியாவில் தென்னாப்பிரிக்க அணி விளையாடிய அனைத்து தொடர்களையும் இந்திய அணி வெற்றி பெற்று வந்தது. ஆனால், கடந்த 2015ஆம் ஆண்டு இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென்னாப்பிரிக்க அணி 3-2 என தொடரைக் கைப்பற்றி சென்றது. எனவே, அதற்குப் பதிலடி தரும் விதத்தில் இந்திய அணி முதன்முறையாகத் தென்னாப்பிரிக்காவில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றி புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி இந்தத் தொடரில் வெற்றி பெற்றால் ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் முதலிடம் பெற வாய்ப்புள்ளது. மாறாக இந்திய அணி மோசமான தோல்வியைத் தழுவினால், மூன்றாவது இடத்துக்குப் பின்னுக்கு தள்ளப்படும்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 1 பிப் 2018