மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 பிப் 2018

தமிழகத்திற்குத் தண்ணீர் தர முடியாது: எடியூரப்பா

தமிழகத்திற்குத் தண்ணீர் தர முடியாது: எடியூரப்பா

காவேரியில் இருந்து தமிழகத்திற்குத் தண்ணீர் தர முடியாது என்று, பெங்களூருவில் இன்று (பிப்ரவரி 1) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் கர்நாடகா பாஜக தலைவர் பிஎஸ் எடியூரப்பா.

டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிரைக் காக்க, 7 டிஎம்சி தண்ணீர் நீரை காவிரியில் கர்நாடகா அரசு திறந்துவிட வேண்டுமென, அம்மாநில முதலமைச்சர் சித்தராமையாவுக்குக் கடிதம் எழுதியிருந்தார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. இது தொடர்பாக, ஜனவரி 17ஆம் தேதியன்று அதிமுக தலைமையகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது, காவிரியில் நீர் திறந்துவிட உதவ வேண்டுமென கர்நாடகா முதலமைச்சருக்கும் இந்திய பிரதமருக்கும் கடிதம் எழுதியிருப்பதாகத் தெரிவித்தார்.

காவிரியில் நீர் திறக்க சித்தராமையா மறுப்பு தெரிவித்தபிறகும், தமிழக முதலமைச்சர் அவரை நேரில் சந்திக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது தமிழக அரசு. வரும் வாரம், எடப்பாடி பழனிச்சாமி – சித்தராமையா சந்திப்பு நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களைச் சந்திக்க நேரம் ஒதுக்குவதாகக் கருத்து தெரிவித்த கர்நாடகா அமைச்சர்களும், காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது என்றே தெரிவித்திருந்தனர்.

இன்று, அதே வார்த்தைகளை சற்று உரத்த குரலில் வெளிப்படுத்தியுள்ளார் கர்நாடகா பாஜக தலைவர் பிஎஸ் எடியூரப்பா. பெங்களூருவில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தவர், தமிழகத்திற்காகக் காவிரியில் நீர் திறப்பது சம்பந்தமான கேள்விக்குப் பதிலளித்தார். அப்போது, காவிரியில் இருந்து தமிழகத்திற்குத் தண்ணீர் தர முடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

“கர்நாடகாவில் உள்ளவர்கள் குடிப்பதற்கே, காவிரியில் தண்ணீர் இல்லை. அப்படியிருக்கும்போது, தமிழகத்திற்கு தண்ணீர் தருவது பற்றி எப்படி யோசிக்க முடியும்?” என்றார். உச்ச நீதிமன்றத்திலுள்ள காவிரி வழக்கில் விரைவில் தீர்ப்பு வரவிருப்பது பற்றிய கேள்விக்கு, ”அதுபற்றி ஆலோசித்து முடிவெடுப்போம்” என்று கூறினார் எடியூரப்பா.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 1 பிப் 2018