மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 பிப் 2018

சிறுமிகள் வன்புணர்வு : மரண தண்டனை தீர்வல்ல!

சிறுமிகள் வன்புணர்வு : மரண தண்டனை தீர்வல்ல!

பெண் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்குவது தீர்வாகாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் சிறுமிகளும் விதிவிலக்கல்ல. சமீபத்தில் ஹாசினி என்ற 7 வயது சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். நாட்டின் தலைநகர் டெல்லியில் பெண்களை பின்தொடருதல், வன்புணர்வுக்கு ஆளாக்குதல் உள்ளிட்ட குற்றங்கள் அதிகளவு நிகழ்வதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்தது.

பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் எதிரான குற்றங்களை தடுக்கக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வந்தது. இந்நிலையில் டெல்லியில் 8 மாத பெண் குழந்தை ஒன்றை உறவினரான இளைஞர் ஒருவர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் பெண் குழந்தையின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவின் பேரில் குழந்தைக்குத் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே இதுபோன்று குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்று வழக்கறிஞர் அலோக் ஸ்ரீவத்சா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் இதுதொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது,

இதுதொடர்பான வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன்பு இன்று (பிப்ரவரி 1) விசாரணைக்கு வந்தது. அப்போது, “தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்பதில் அரசு முரண்படுகிறது. குழந்தைகள் மீதான பாலியல் குற்றம் என்பது கொடூரமானது என்பதை அரசு ஒப்புக் கொள்கிறது. ஆனால் எந்தவிதமான தவறுக்கும் மரண தண்டனை தீர்வாகாது என மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் வழக்கறிஞர் நரசிம்மா வாதிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்துக்கு ரூ.70 ஆயிரம் இடைகால நிவாரணம் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

வியாழன் 1 பிப் 2018