மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 பிப் 2018

தொடரும் ஜாக்குலின்-தப்ஸி சண்டை!

தொடரும் ஜாக்குலின்-தப்ஸி சண்டை!

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுடன் இனி நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார் நடிகை தப்ஸி

தமிழ், தெலுங்கு சினிமா மட்டுமல்லாது இந்தி சினிமாவுலகிலும் நடித்து வருகிறார் தப்ஸி. வருண் தவான் இரட்டை வேடங்களில் நடித்துள்ள ஜூட்வா 2 படத்தில் ஜாக்குலின் பெர்னாண்டஸும் தப்ஸியும் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கின்றனர். இந்த படத்தில் தயாரிப்பாளருடன் தப்ஸி நெருக்கமாக இருக்கிறார். இதனால் அவருக்குப் படத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்று ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றம் சாட்டினார். இதன் காரணமாக ஜாக்குலினுக்கும் தப்ஸிக்கும் பிரச்சினை ஏற்பட்டது.

இந்நிலையில் என்டர்டெயின்மென்ட் கி ராக் என்ற டி.வி.நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தப்சி தனது திரையுலக அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இந்த நிகழ்ழ்சியில் இனி எந்த நடிகையுடன் மீண்டும் சேர்ந்து நடிக்க மாட்டீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு தப்ஸி, ‘ஜாக்குலின் பெர்னாண்டஸ்’ என்று ஆவேசமாகத் தெரிவித்தார். உடனே ‘ஜாக்குலினா?’ என்று அடுத்த கேள்வி கேட்க, சுதாரித்துக் கொண்ட தப்ஸி ஏற்கனவே “நாங்கள் சேர்ந்து நடித்து விட்டோம். அவர் உடலைக் கச்சிதமாக வைத்திருப்பதைப் பார்த்து பொறாமையாக இருக்கிறது” என்று பதில் அளித்துச் சமாளித்தார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

வியாழன் 1 பிப் 2018