மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 பிப் 2018

கோவை இளைஞர்களின் புதிய ஸ்மார்ட் கைதடி!

கோவை இளைஞர்களின் புதிய ஸ்மார்ட் கைதடி!

பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் கோவையைச் சேர்ந்த இளைஞர்கள் பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி புதிய ஸ்மார்ட் கைதடியை உருவாக்கியுள்ளனர்.

பார்வையற்றோர்களுக்கு உதவியாக இருப்பது அவர்களின் கைத்தடிதான். அந்தக் கைதடி மேம்படுத்தப்பட்ட முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதாவது, எதிரே இருக்கும் பொருள் என்னவென்று அறிந்துகொள்ளும் வகையில் புதிய ஸ்மார்ட் கைதடியை கோவையைச் சேர்ந்த மின்னணு மற்றும் மென்பொருள் பொறியியல் பட்டதாரிகள் அபுதாகித், ஆனந்தகிருஷ்ணன் ஆகியோர் வடிவமைத்துள்ளனர்.

மூன்று வகையான தொழில்நுட்பங்களுடன் இந்தக் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது எதிரே வரும் பொருட்களை அறிவதற்காகவும், மின்சாரப் பயன்பாட்டை வாய்மொழி மூலமாக கட்டுப்படுத்தவும், தனியாக இருக்கும்போது செய்திகள் மற்றும் பொதுஅறிவு உள்ளிட்டவற்றை அறிந்துகொள்ளவும் பயன்படுகிறது. இந்தக் கண்டுப்பிடிப்பு தமிழக அரசின் மாணவர்கள் கண்டுபிடிப்பு என்ற திட்டத்தில் தேர்வாகியுள்ளது. அதனால், அந்த ஆய்வுக்கூடத்திலிருந்து தொடர்ந்து தமிழக அரசின் உதவியுடன் இந்தக் கருவியை உருவாக்கியுள்ளனர்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வியாழன் 1 பிப் 2018