மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 பிப் 2018

போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் அவசர ஆலோசனை!

போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் அவசர ஆலோசனை!

போக்குவரத்து ஊழியர்களின் 7 நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இன்று (பிப்ரவரி 1) நடைபெற்ற போக்குவரத்து தொழிற்சங்க ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் கடந்த ஜனவரி 4 முதல் 11 ஆம் தேதி வரை போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் நடைபெற்ற 7 நாட்களுக்கு ஊழியர்களின் ஊதியத்தை பிடித்துக் கொண்டு தமிழக அரசு ஜனவரி மாத ஊதியத்தை வழங்கியது. இதனால் ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று தொழிற்சங்கத்தினரின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தொழிற்சங்க நிர்வாகிகள் நடராஜன் (தொ.மு.ச.), ஆறுமுக நயினார் (சி.ஐ.டி.யூ.), சுப்பிரமணிய பிள்ளை (எச்.எம்.எஸ்.), லட்சுமணன் (ஏ.ஐ. டி.யூ.சி.), உட்பட பல்வேறு தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக்குப் பிறகு நிர்வாகி சுப்பிரமணிய பிள்ளை, “போக்குவரத்து தொழிலாளர்களின் சம்பள பிடித்தம் குறித்து விளக்கம் கேட்க போக்குவரத்து துறை செயலாளரைச் சந்தித்து பேச வேண்டும் என்று கேட்டதற்கு, அவர் அடுத்த வாரம் பார்க்கலாம் என்று தெரிவித்துவிட்டார்

தொழிலாளர்களின் பிரச்சினை குறித்து விசாரணை நடத்த நீதிபதி பத்மநாபனை மத்தியஸ்தராக நியமித்து அறிவிப்பு வெளியானது. ஆனால் அதற்கான அரசாணை இன்னும் பிறப்பிக்கப்படவில்லை.

எனவே அனைத்தையும் கருத்தில் கொண்டு மீண்டும் நீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்துள்ளோம் “ என்று கூறினார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வியாழன் 1 பிப் 2018