மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 பிப் 2018

ரசிகருக்கு தங்கச் சங்கிலி பரிசளித்த தனுஷ்

ரசிகருக்கு தங்கச் சங்கிலி பரிசளித்த தனுஷ்

நெல்லையில் தனது ரசிகரின் திருமணத்திற்கு சர்ப்பரைஸ் விசிட் அடித்த தனுஷ், ரசிகருக்கு தங்கச் சங்கிலி பரிசளித்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்த மாரி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து அதன் இரண்டாம் பாகம் மாரி 2 என்ற பெயரில் உருவாகிவருகிறது. தற்போது தனுஷ், சாய் பல்லவி நடித்துவரும் காட்சிகள் நெல்லைப் பகுதியில் தீவிரமாக படமாக்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில் தனுஷ் நெல்லையில் தனது ரசிகர் ஒருவரின் திருமணத்திற்கு முன்னறிவிப்பின்றி சென்று சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். தனுஷ் ரசிகர்கள் தனுஷின் திடீர் வரவால் பெரிதும் மகிழ்ந்துள்ளனர். அங்கு சென்று தனுஷ் மணமக்களை வாழ்த்தியதோடு ரசிகருக்கு தங்கச் சங்கிலியை பரிசாக அளித்துள்ளார். ரசிகரின் திருமணத்திற்கு சர்ப்ரைஸாக வந்து தங்கச் செயின் பரிசளித்த தனுஷின் இந்தச் செயலை அவரது ரசிகர்கள் பலரும் பாராட்டிவருகின்றனர்.

சூர்யா, கார்த்தி தனது ரசிகர்களின் மீது கவனம் செலுத்துவதுடன் ரசிகர்கள் சம்பந்தமான நிகழ்வுகளிலும் கலந்துகொண்டுவருகின்றனர். தற்போது தனுஷும் அதே பாணியைப் பின்பற்றி ரசிகர்களின் மீது அக்கறை செலுத்திவருகிறார்.

மாரி 2வில் தனுஷ், கிருஷ்ணா, சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், டோவினோ தாமஸ் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துவருகின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துவருகிறார். தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் இப்படம் உருவாகவுள்ளது. தீவிரமாக நடைபெற்றுவரும் படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்ததாக தான் இயக்கும் படத்தில் தனுஷ் கவனம் செலுத்தவுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 1 பிப் 2018