மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 பிப் 2018

சுழற்சி முறையில் வழக்குகள் ஒதுக்கப்படும்: தீபக் மிஸ்ரா

சுழற்சி முறையில் வழக்குகள் ஒதுக்கப்படும்: தீபக் மிஸ்ரா

வரும் பிப்ரவரி 5ஆம் தேதி முதல் உச்ச நீதிமன்றத்தில் சுழற்சி முறையில் வழக்குகள் நீதிபதிகளுக்கு ஒதுக்கப்படும் என்று அறிவித்துள்ளார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா.

உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய செயல்பாடுகளில் திருப்தியில்லை என்று, ஜனவரி 12ஆம் தேதியன்று நீதிபதிகள் செலமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் லோகூர் மற்றும் குரியன் ஜோசப் ஆகியோர் டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். மூத்த நீதிபதிகளுக்கு உரிய வழக்குகள் ஒதுக்கப்படவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர். நீதிபதி பிஹெச் லோயா மரணம் குறித்த வழக்கு, 20ஆம் நிலையில் இருந்த நீதிபதி அருண் மிஸ்ராவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது குறித்து அவர்கள் அதிருப்தி தெரிவித்தனர். உச்ச நீதிமன்ற செயல்பாடுகள் குறித்து, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எழுதிய கடிதத்தையும் அதிருப்தி நீதிபதிகள் வெளியிட்டனர்.

இதனையடுத்து, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா 4 நீதிபதிகளையும் சந்தித்துப் பேசினார். அதன்பிறகு, நீதிபதி லோயா மரண வழக்கை தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிமன்ற அமர்வு விசாரிப்பதாக அறிவிக்கப்பு வெளியானது.

இந்த நிலையில், வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி முதல் உச்ச நீதிமன்ற வழக்குகள் சுழற்சி முறையில் நீதிபதிகளுக்குப் பிரித்து வழங்கப்படும் என இன்று (பிப்ரவரி 1) அறிவிப்பு வெளியிட்டார் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 1 பிப் 2018