செயற்கை நுண்ணறிவால் பாதுகாப்பு!


செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள தேவையற்ற, தீங்கு விளைவிக்கும் சுமார் 7 லட்சம் அப்ளிகேஷன்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
வருடந்தோறும் கூகுள் நிறுவனத்தின் பிளே ஸ்டோரில் உள்ள அப்ளிகேஷன்களை ஆய்வு செய்து, பயனர்களின் தகவல்களுக்கு தீங்கு விளைவிக்கும் அப்ளிகேஷன்களை கூகுள் நிறுவனம் நீக்கம் செய்து வருகிறது. அதன்படி கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரு லட்சம் அப்ளிகேஷன்கள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம் செய்யப்பட்டன. அதன் தொடர்ச்சியாக கடந்த வருடம் 70 சதவிகிதம் அதிகரித்து ஏழு லட்சம் அப்ளிகேஷன்களை கூகுள் நிறுவனம் நீக்கி உள்ளது.