மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 பிப் 2018

கருக்கலைப்பு: ஸ்கேன் சென்டர்களில் ஆய்வு!

கருக்கலைப்பு: ஸ்கேன் சென்டர்களில் ஆய்வு!

திருவண்ணாமலையில் கருக்கலைப்பு அதிகமாக நடப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மத்திய மருத்துவக் குழுவினர் அங்குள்ள ஸ்கேன் சென்டர்களில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டவிரோதமாக அதிகளவில் கருக்கலைப்பு நடைபெறுகிறது. இந்தச் சட்டவிரோத செயலில் போலி மருத்துவர்கள் ஈடுபடுவதாகவும், கருக்கலைப்பு செய்வதற்காகவே நிறையப் போலி மருத்துவர்கள் உருவாகிறார்கள் என்றும் தொடர் புகார்கள் வெளிவந்தவண்ணம் உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமார் 40க்கும் மேற்பட்ட ஸ்கேன் சென்டர்கள் உள்ளன. இதில் நகர்ப் பகுதிகளில் மட்டும் 15 முதல் 20 ஸ்கேன் சென்டர்கள் செயல்பட்டுவருகின்றன. மேலும் இந்த ஸ்கேன் சென்டர்களில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு நடப்பதாக டெல்லி மருத்துவக் குழுவினருக்கு தொடர்ந்து புகார்கள் வருகின்றன.

பெண்ணின் கருவில் இருப்பது ஆணா அல்லது பெண்ணா என்று பரிசோதனை செய்து, அந்தக் கருவைக் கலைக்கவும், தவறான வழியில் கருவுற்ற பெண்களும் இந்த ஸ்கேன் சென்டர்களுக்கு வந்து கருக்கலைப்பு செய்துகொள்கிறார்கள். பெண் சிசுவதைத் தடுப்புச் சட்டம் 1994இன் கீழ் அமைக்கப்பட்ட மாநிலக் குழுவினரும் தொடர்ந்து ஸ்கேன் சென்டர்களில் சோதனை மேற்கொண்டுவருகிறார்கள்.

இந்நிலையில் டெல்லி குடும்ப நலத் துணை இயக்குனர் அஜய்குமார் தலைமையிலான 7 பேர் கொண்ட மத்திய மருத்துவக் குழுவினர், திருவண்ணாமலையில் உள்ள ஸ்கேன் சென்டர்களில் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள ரமணா ஸ்கேன் சென்டரில் உள்ள ஸ்கேன் செய்யும் அறைக்கும் அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

கடந்த 2016ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் உள்ள ஒரு ஸ்கேன் சென்டரில் மருத்துவக் குழுவினர் சோதனை செய்தபோது, போலி மருத்துவரால் உரிய ஆவணங்கள் இன்றி இயங்கி வந்த ஸ்கேன் சென்டருக்கு சீல் வைத்து அந்தப் போலி மருத்துவரைக் கைது செய்தனர். அந்தப் போலி மருத்துவர் ஒரு வருடத்திற்கு சுமார் 2000 கருக்கலைப்பு செய்ததாக விசாரணையில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 1 பிப் 2018