மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 பிப் 2018

பட்ஜெட்: சிறப்பு அம்சங்கள் என்ன?

பட்ஜெட்: சிறப்பு அம்சங்கள் என்ன?

மத்திய பாஜக ஆட்சியின் கடைசி பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி இன்று(பிப்ரவரி 1) தாக்கல் செய்தார்.

2018- 2019ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண்ஜேட்லி இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை ராஷ்டிரபதி பவனுக்கு சென்று அருண் ஜெட்லி சந்தித்து பேசினார். பின்னர் நாடாளுமன்றத்துக்கு அருண்ஜேட்லி வருகை தந்தார். முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவதற்கான பட்ஜெட் நகல் கொண்டுவரப்பட்டது.

காலை 11 மணிக்கு பட்ஜெட் உரையை அருண்ஜேட்லி வாசிக்க தொடங்கினார். அப்போது, “உலகின் 5 வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு என்ற பெருமையை இந்தியா விரைவில் எட்டும். 2018- 2019 ஆம் நிதியாண்டின் 2 ஆம் பகுதியில் 7.2% முதல் 7.5% வரை பொருளாதார வளர்ச்சி இருக்கும்”, என அவர் குறிப்பிட்டார்.

இதேபோல், கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில் பட்ஜெட் இருக்கும் என தெரிவித்த அவர், “நலிந்தோருக்கு நன்மை செய்யும் பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் இருக்கும்; இந்த பட்ஜெட்டில் விவசாயம், கல்வியை வலிமைப்படுத்த முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலனில் இந்த அரசு அக்கறை கொண்டுள்ளது எனவும், 2022-ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக்கப்படும்” என்று உறுதியளித்தார்.

பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள்

• கால்நடை மற்றும் மீன்வளத்துறைக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு

• 8 கோடி ஏழை பெண்மணிகளுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்க இலக்கு முன்மொழியப்பட்டுள்ளது

• தூய்மை இந்தியா திட்டத்தில் 2 கோடி கழிவறைகள் கட்டப்படும்.

• கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பரவல் அதிகரிக்கப்படும்.

• அரியானா, பஞ்சாப், உத்தரபிரதேசம், டெல்லி என்ஜிஆர் பகுதிகளில் காற்று மாசுவை குறைப்பதற்கு புதிய திட்டம்.

* 2022ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு.

* அனைவருக்கும் வீடு திட்டத்துக்கு ரூ.750 கோடி ஒதுக்கீடு.

• புதிதாக 24 அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்

• 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படும். அதன்படி, குடும்பம் ஒன்றுக்கு ரூ. 5 லட்சம் ரூபாய் வரை சிகிச்சை செலவை அரசு ஏற்கும்.

• குறைந்த விலையில் வீடுகள் கட்டும் திட்டத்துக்குத் தனி நிதியம் அமைக்கப்படும்

• மூங்கில் வளர்ப்புத் திட்ட விரிவாக்கத்துக்கு ரூ.1290 கோடி ஒதுக்கீடு.

• தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு ஏகலைவ பள்ளிகள் தொடங்கப்படும்.

• கங்கையை சுத்தப்படுத்துவதற்கு 187 திட்டங்களுக்கு ஒப்புதல்

• தாழ்த்தப்பட்டவர்கள் நலத்திட்டங்களுக்கு ரூ.56,619 கோடியும் பழங்குடியினர் நலத்திட்டங்களுக்கு ரூ. 39,135 கோடியும் அறிவிப்பு

• 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தும் ரயில் நிலையங்களில் நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்படும். அனைத்து ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்கள் வைஃபை மற்றும் சிசிடிவி வசதி ஏற்படுத்தப்படும்.

• நாடு முழுவதும் 4,267 ஆளில்லா ரயில்வே கேட்கள் மாற்றி அமைக்கப்படும்.

• ரூ. 40 ஆயிரம் கோடி செலவில் நாடு முழுவதும் புறநகர் ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும்.

• உதான் திட்டத்தின் கீழ் 56 புதிய விமான நிலையங்கள் இணைக்கப்படும்.

• கிரிப்டோ கரன்ஸிகளை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

• ஆப்டிக் ஃபைபர் மூலம் ஒரு லட்சம் கிராம பஞ்சாயத்துகள் இணைக்கப்பட்டுள்ளன. விரைவில் 5 லட்சம் வைஃபை ஸ்பாட்கள் உருவாக்கப்படும்.

• சாலை வசதியை மேம்படுத்த முதற்கட்டமாக ரூ. 5000 கோடி ஒதுக்கீடு.

குடியரசுத் தலைவர், ஆளுநர் ஊதியம் உயர்கிறது

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 1 பிப் 2018