மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 பிப் 2018

ரஜினி மன்ற லோகோ: பாம்பு நீக்கம்!

ரஜினி மன்ற லோகோ: பாம்பு நீக்கம்!

ரஜினி மக்கள் மன்றத்தின் லோகோவிலிருந்து ஏற்கனவே தாமரை நீக்கப்பட்ட நிலையில், தற்போது சுழலும் பாம்பு வடிவமும் நீக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டின் இறுதி நாளான டிசம்பர் 31ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த், அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ளதாகத் தன்னுடைய ரசிகர்கள் மத்தியில் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து ரஜினி மன்றம் என்ற பெயரில் செயலியும், இணையப் பக்கமும் தொடங்கப்பட்டு உறுப்பினர் சேர்க்கை தீவிரமானது. ரசிகர் மன்றம் ரஜினி மக்கள் மன்றம் என்று பெயர் மாற்றமும் செய்யப்பட்டது.

ரஜினி மன்றத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்ட லோகோவில் பாபா முத்திரையும், அதனைச் சுற்றி நாகப்பாம்பு இருப்பது போன்றும் மற்றும் தாமரை மலரும் இடம்பெற்றிருந்தன. இதைத் தொடர்ந்து ரஜினி மன்றம் மற்றும் ராமகிருஷ்ண மடத்தின் லோகோ ஒன்றுபோல இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாயின. முத்திரையின் கீழ் இடம்பெற்றிருந்த தாமரை இலை பாஜகவின் சின்னம் என்பதால் சர்ச்சையும் எழுந்தது. எனவே லோகோவில் இருக்கும் தாமரை சின்னத்தை நீக்கி ரஜினிகாந்த் உத்தரவிட்டார். அதன்பிறகு லோகோவில் பாபா முத்திரையும், சுழலும் பாம்புவும் மட்டுமே இடம்பெற்றிருந்தது.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

வியாழன் 1 பிப் 2018