மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 பிப் 2018

தொழில் துறையினரின் எதிர்பார்ப்புகள்!

தொழில் துறையினரின் எதிர்பார்ப்புகள்!

மத்திய பா.ஜ.க அரசின் கடைசி பட்ஜெட் என்பதாலும் ஜி.எஸ்.டிக்கு பிறகான முதல் பட்ஜெட் என்பதாலும் இந்தியாவின் பல்வேறு தொழில்முனைவோர் பல்வேறு எதிர்பார்ப்புகளோடு இருக்கின்றனர். தென்னிந்திய வர்த்தக மற்றும் தொழில் துறை கூட்டமைப்பானது இதற்கான ஆலோசனைக் கூட்டம் ஒன்றை இன்று (பிப்ரவரி) சென்னையில் ஏற்பாடு செய்திருந்தது.

தென்னிந்திய வர்த்தக மற்றும் தொழில் துறை கூட்டமைப்பின் செயலாளர் ராகவன் மத்திய பட்ஜெட் குறித்து நியூஸ் 18 ஊடகத்திடம் பேசுகையில், “தொழில் துறையைப் பொறுத்தவரையில் இந்த பட்ஜெட் மிக முக்கியமான பட்ஜெட்டாகக் கருதுகிறோம். மறைமுக வரியில் ஜி.எஸ்.டி இருப்பதால் பெரிய பாதிப்பு இருக்காது. சுங்க வரியைப் பொறுத்தவரை சில திருத்தங்கள் ஏற்படலாம். வருமான வரி மற்றும் நேரடி வரிகளில் சில சீர்திருத்தங்கள் தேவைப்படுகிறது. அவை இந்த பட்ஜெட்டில் மேற்கொள்ளப்படும் என நம்பிக்கை வைத்துள்ளோம். எல்லாவற்றுக்கும் மேலாக இந்த பட்ஜெட்டில் தனியார் முதலீட்டில் அதிகக் கவனம் செலுத்தப்பட வேண்டும். அதற்குண்டான வசதிகளைச் செய்து தர வேண்டும். மற்றொன்று வேலை வாய்ப்பு உருவாக்கம். இவ்விரண்டிலும் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறு கவனம் செலுத்தினால் இந்த பட்ஜெட் சிறந்த பட்ஜெட்டாகவும் நாட்டிற்குத் தரமான சேவை வழங்குவதாகவும் இருக்கும்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வியாழன் 1 பிப் 2018