மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 பிப் 2018

கர்ப்பிணியின் உயிரோடு விளையாடிய மருத்துவர்கள்!

கர்ப்பிணியின் உயிரோடு விளையாடிய மருத்துவர்கள்!

திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைபெற வந்த நிறைமாத கர்ப்பிணி பெண்ணை சுமார் 5 மணி நேரம் காக்க வைத்து, அந்தப் பெண்ணின் உயிரோடு விளையாடியதாகப் புகார் எழுந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பெரியகுப்பம் பகுதியில் மேட்டுத்தெருவைச் சேர்ந்த கவிதா என்ற நிறைமாத கர்ப்பிணிப் பெண் சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்குப் பிரசவ வலியுடன் வந்துள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை பார்ப்பதற்கு மருத்துவர்கள் இல்லாததால் சுமார் 5 மணிநேரம் கர்ப்பிணிப் பெண் வலியால் துடித்துள்ளார். மருத்துவமனைக்குத் தாமதமாக வந்த பெண் மருத்துவரும் மருத்துவமனை ஊழியர்களும் அலட்சியமாக கர்ப்பிணிப் பெண்ணின் உறவினர்களிடம் பேசியுள்ளனர்.

அதன் பின்பு மருத்துவர்கள் கவிதாவைப் பரிசோதித்துவிட்டு அவரைச் சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கவிதாவை அழைத்துவந்தனர்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

வியாழன் 1 பிப் 2018